Advertisment

வெயில் சுட்டெரித்தாலும் தென்மேற்கு பருவமழை அதிகம் கிடைக்கும் - தமிழ்நாடு வெதர்மேன்

வெயில் சுட்டெரித்தாலும், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை அதிகமாக கிடைக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தனியார் வானிலை ஆர்வலர் ஜான் பிரதீப் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Tamil Nadu Weatherman Pradeep John Kanyakumari Southwest Monsoon Rainfall Updates

தமிழ்நாடு வெதர்மேன் தனியார் வானிலை ஆர்வலர் ஜான் பிரதீப்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், சென்னையில் குடிநீர் பிரச்னை வருமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், வெயில் சுட்டெரித்தாலும், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை அதிகமாக கிடைக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தனியார் வானிலை ஆர்வலர் ஜான் பிரதீப் தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்த ஆண்டு வெயிலின் வெப்பம் பிப்ரவரி மாதம் முதலே தொடங்கிவிட்டது. தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. ஏப்ரல் மாதம் முடிவதற்குள்ளாகவே வெயிலின் வெப்பம் தாங்க முடியாததாக இருக்கிறது. பல ஏரிகள், சிறிய அளவிலான நீர்நிலைகள் வேகமாக வறண்டு வருகின்றன. இன்னும் மே மாதம் என்ன ஆகுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகிறது. 

தொடர்ந்து, கொளுத்தி வரும் வெயிலால், சென்னையில் இந்த ஆண்டு குடிநீர் பிரச்னை ஏற்படுமா என்ற் கேள்விகள் எழுந்தன. ஏனென்றால், சென்னையில் உள்ள புழல் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, பூண்டி ஏரி ஆகியவை முக்கிய குடிநீர் ஆதாரங்களாக உள்ளன.

இந்நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் தனியார் வானிலை ஆர்வலர் ஜான் பிரதீப், இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை அதிகம் கிடைக்கும், அதனால், சென்னையில் குடிநீர் பிரச்னை இருக்காது என்று தெரிவித்துள்ளார். மேலும், மே மாதம் வெயில் சுட்டெரிக்கும் என்று தெரிவித்துள்ளர்.

தமிழ்நாடு வெதர்மேன் ஜான் பிரதீப் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூற்யிருப்பதாவது: “எல் நினோ ஆண்டு முடிந்த அடுத்த ஆண்டு வெப்பநிலை அதிகரிக்கும். கடந்த ஆண்டு எல் நினோ ஆண்டு. கடந்த ஆண்டின் போதே ஜூன், ஆகஸ்ட் மாதங்களிலேயே வெப்பநிலை அதிகமாக இருந்தது. அத்துடன் வெப்பச் சலன மழை குறைவாக இருப்பதும் வெப்பநிலை அதிகரிப்பதற்கான காரணங்களாக உள்ளன.

ஏப்ரல் வரை கிழக்கிலிருந்து (கடற்பகுதி) காற்று வீசும். தென்மேற்கு பருவமழை தொடங்கும் போது மேற்கிலிருந்து தரைகாற்று வீசத் தொடங்கும். வட ஆந்திரா, உள் கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மே 4 முதல் மே 28 வரை வறண்ட தரைக்காற்று வீசத் தொடங்கும், இதைத் தான் அக்னி நட்சத்திரம் அல்லது கத்திரி வெயில் என்கிறோம்.

அக்னி நட்சத்திரம் சமயத்தில் தான் அதிக வெப்பநிலை இருக்கும் என்று சொல்ல முடியாது, ஏனெனில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தான் அதிக வெப்பநிலை பதிவானது. பள்ளிகளுக்கும் 10 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. சென்னையைப் பொறுத்தவரை மே இறுதி முதல் ஜூன் 10-ம் தேதி வரை கிழக்கில் இருந்து கடற்காற்று வர சிரமப்படும் போதுதான் அதிக வெப்பநிலையை பார்க்கிறோம்.

உள் மாவட்டங்களில் ஏப்ரலில் தான் அதிக வெப்பநிலை இருக்கும். கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை கிழக்கிலிருந்து வருவது தான் தரைக்காற்று. மே மாதத்திற்கு பிறகு மேற்கிலிருந்து காற்று வரத் தொடங்கும் போது வெப்பநிலை குறைவாகும். ஏப்ரல் மாதத்தில் அங்கு வெப்பநிலை அதிகமாகும்.



கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கியது. எனவே ஜூன் 15 வரை வெப்பநிலை அதிகமாக இருந்தது. இந்த முறை மே இறுதியில் அல்லது ஜூன் முதலிலேயே தொடங்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும் இன்னும் நாள்கள் நெருங்கும் போது தான் உறுதியாக சொல்ல முடியும்.

வெப்பச்சலன மழையை பொறுத்தவரை கன்னியாகுமரி மாவட்டத்தில் தினமோ அல்லது ஒருநாள் விட்டு ஒருநாளோ பெய்யும். தென்காசி, நீலகிரி உள்ளிட்ட மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே வெப்பச் சலன மழை பெய்யலாம்.

ஆனால், சென்னையைப் பொறுத்தவரை வெப்பச் சலன மழைக்கு வாய்ப்பு இல்லை. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகினாலோ, மேலடுக்கு சுழற்சி உருவானாலோ தான் மழை வரும், ஆனால், அடுத்த 15 நாள்களுக்கு அதற்கு வாய்ப்பு இல்லை. தொடர்ந்து வெப்பநிலை அதிகரிக்கத் தான் அதிக வாய்ப்பு உள்ளது” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

John Pradeep
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment