பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் மீது பெண் போலீசை அவமதித்ததாக குற்றஞ்சாட்டு உள்ளது. இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சர்ச்சைக்குள்ளான பேட்டியை எடுத்தவர் பத்திரிகையாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஆவார். இவர் மீதும் பல்வேறு வழக்குகள் போடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அப்போது ஒரே வழக்கில் வேண்டும் என்றே பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. ஆகவே எனக்கு பிணை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இந்த வழக்கு நீதிபதி தமிழ்செல்வி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமின் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது ஃபெலிக்ஸ் ஜெரால்டின் கேள்விகள் உள்நோக்கத்துடன் கேட்கப்பட்டன என அரசுத் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தமிழ்செல்வி, “பெலிக்ஸ் ஜெரால்டு கேள்விகளில் உள்நோக்கம் இருப்பதற்கான முகாந்திரம் உள்ளது. ஒரு தவறான தகவல் கொண்ட பிரச்னையை தூண்டும் வகையில் மனுதாரரின் கேள்வி உள்ளது. மனுதாரர் ஒரு பாமரர் அல்ல. அவருக்கு ஜாமின் வழங்க முடியாது” என உத்தரவிட்டார்.
மேலும், “சம்மந்தப்பட்ட அந்தப் பேட்டியை மனுதாரர் எடிட் செய்து வெளியிட்டு இருக்கலாம்” எனவும் நீதிபதி கூறினார். ஃபெலிக்ஸ் ஜெரால்டு வழக்கறிஞர், “தனது கட்சிக்காரர் கடந்த 47 நாள்களாக சிறையில் இருக்கிறார்; சவுக்கு சங்கர் கருத்துக்கும் அவருக்கும் தொடர்பு இல்லை” எனத் தெரிவித்தார். மேலும் இதுவரை 87 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நீண்ட நாள்களாக அவர் சிறையில் இருப்பதை கவனத்தில் கொண்டு அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“