‘தமிழ் பாரம்பரியம் இல்லாமல் இந்திய பாரம்பரியம் இல்லை’ – ஜே.பி.நட்டா உரையின் ஹைலைட்ஸ்

திருவள்ளூரில் நடைபெற்ற விழாவில், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவண்ணாமலை, திருவள்ளூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் பாஜக அலுவலகம் கட்டும் பணியை, ஜே.பி.நட்டா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். திருவள்ளூா் அருகே புட்லூரில் பா.ஜ.க சாா்பில் தமிழகத்தில் 16 மாவட்ட தலைநகரங்களில் கட்சி அலுவலகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா…

By: November 30, 2019, 10:36:49 PM

திருவள்ளூரில் நடைபெற்ற விழாவில், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவண்ணாமலை, திருவள்ளூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் பாஜக அலுவலகம் கட்டும் பணியை, ஜே.பி.நட்டா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

திருவள்ளூா் அருகே புட்லூரில் பா.ஜ.க சாா்பில் தமிழகத்தில் 16 மாவட்ட தலைநகரங்களில் கட்சி அலுவலகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (நவ.30) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பாஜக தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டாவை குதிரை சாரட் வாகனத்தில் அழைத்து வந்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


அதைத் தொடா்ந்து அவா் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் அலுவலக கட்டடம் அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைத்தாா்.


பின்னர் பாஜக தொண்டர்கள் மத்தியில் ஜே.பி.நட்டா உரையாற்றினார். அவற்றில் முக்கியமானவை இங்கே,

தமிழகத்தில் சக்தி மிக்க கட்சியாக பாஜகவை மாற்ற முடியும் என்ற நம்பிக்கை, எனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின் மூலமாக வந்துள்ளது.

தமிழக கலாச்சாரம், பண்பாடு என்பது தமிழக மக்களுக்கானது அல்ல. தேசிய அளவில் பாரதத்திற்கே பழமையான கலாச்சார தொன்மையை வழங்கியுள்ளது. இதன் மூலம் தமிழ் பாரம்பரியம் இல்லாமல் இந்திய பாரம்பரியம் இல்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற காரணங்களால் தான் தமிழ் மொழி கலாசாரத்தை ஐக்கிநாடுகள் சபையில் தமிழகத்தின் பெருமையை பிரதமா் மோடி எடுத்துரைத்தார்.

திருக்குறள் என்ற மிகப்பெரிய இலக்கியமும் இம்மண்ணில் தோன்றியுள்ளது. மனித நேயத்திற்கு மாபெரும் சான்று திருக்குறளாகும்.

கடந்த 5 ஆண்டுகளில் சொல்லக்கூடிய அளவுக்கு மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு சர்வதேச அளவில், பெரிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். அதன் அடிப்படையில் இந்தியாவின் அடையாளத்தை கொண்டு வந்துள்ளார்.

கடந்த 70 ஆண்டுகளாக காஷ்மீருக்கு வழங்கப்பட்ட அரசியல் சாசன அமைப்புச் சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்து, சட்டப்புத்தகத்திலிருந்து நீக்கம் செய்யப்பட்டது.

அகில இந்திய அளவில் போபால், புவனேஷ்வா் உள்ளிட்ட 6 இடங்களில் நவீன எய்ம்ஸ் மருத்துவமனைகள் இருந்தது. தற்போது, 22 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு ரூ.1200 கோடியில் பணி நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்திலும் மதுரையிலும் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு மருத்துவம் அளிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் 5 மருத்துவமனைகள் 1500 கோடியில் நவீன வசதிகள் செய்து கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதமா் இலவச குடியிருப்பு திட்டம் மூலம் நாடு முழுவதும் 2 கோடி வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 5.30 லட்சம் குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மற்றும் திமுக இணைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் விவசாயிகளுக்கான ரூ.53 ஆயிரம் கடனை ரத்து செய்துள்ளோம் என்கின்றனார். ஆனால், விவசாயிகள் நலனை பாதுகாப்பதில் மோடி சிறப்பான நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் மூலம், இதுவரையில் ரூ.75 ஆயிரம் கோடி வரையில் வழங்கப்பட்டள்ளது.

நாட்டில் நிலவி வரும் மீனவா்கள் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காணவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக கடல் எல்லைப் பகுதியில் மீனவர்கள் மீது நடத்தப்படும் துப்பாக்கிச் சூட்டை தடுப்பதில் கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கிறோம்” என்றார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Jp nadda lays foundation stone for bjps tamil nadu party offices

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X