V Senthil Balaji | செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது சட்டவிரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14- ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யபட்டார்.
இவர் தற்போதுவரை நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இதுவரை செந்தில் பாலாஜிக்கு 30க்கும் மேற்பட்ட முறை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளளது.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ள வழக்கில் ஏப்ரல் 17-ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
இதற்கிடையில், செந்தில் பாலாஜி வழக்கில் வழக்கில் மீண்டும் வாதிட அனுமதி கோரி அவரது தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் இந்த வழக்கில் எங்களுக்கு இன்னமும் போதிய ஆவணங்கள் கிடைக்கவில்லை. அந்த ஆவணங்கள் கிடைத்த பின்னர், அதன் அடிப்படையில் இதில் வாதிட அனுமதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது செந்தில் பாலாஜி வழக்குரைஞர் கௌதமன், ஆவணங்களில் வேறுபாடு இருக்கிறது என்றார். இந்தக் குற்றச்சாட்டுகளை அமலாக்கத் துறை வழக்கறிஞர் என். ரமேஷ் ஏற்கவில்லை.
இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் காவரை ஏப்.17ஆம் தேதிவரை நீட்டித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதன்மூலம் 32ஆவது முறையாக செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“