இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவின் நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாடட்டம் நடைபெற்றது. சென்னை நந்தனத்தில் உள்ள அவரின் இல்லத்தில் நூலக திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் பங்கேற்று நூலகத்தை திறந்து வைத்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், "சமூகத்திற்கு தலைவைர் ரொம்ப முக்கியம்.அண்மையில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை 2 படம் பார்த்தேன். அந்த படத்தில் தலைவர் முக்கியமல்ல, தத்துவம் முக்கியம் என்ற வசனம் வரும். அதில் எனக்கு முரண்பாடு உள்ளது. பெரிய தத்துவமாக இருக்கலாம். காரல் மார்க்ஸ் தாஸ் கேபிடல் நூலை எழுதும் போது அவருடைய வாழ்க்கை சூழல் என்ன? . 3 குழந்தைகளுக்கு உணவில்லை. வறுமை நிலை.
ஆனால் அவர் மக்களை நினைத்து அந்த நூலை எழுதுகிறார். அதைப் தொடர்ந்து பல தலைவர்கள் வந்தார்கள். கடைசியில் கோர்பட்சே இடம் வரும் போது அந்த தத்துவம் என்ன ஆனது?
நாம் யோசிக்க வேண்டும். தலைவர் முக்கியமல்ல, தத்துவம் தான் முக்கியம் என்று சொல்லும் போது கேட்க நன்றாக உள்ளது. மார்க்ஸ் எழுதிய அதே தத்துவம் தான் கோர்பட்சே எழுதும் போதும் இருந்தது. அதன் பிறகு என்ன ஆனது? இன்றைய நிலை என்ன என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால் தத்துவம் இருக்கலாம். நல்ல தலைவர் நமக்குத் தேவை. அது ரொம்ப முக்கியம் என்றும் நான் நினைக்கிறேன்" என்றார்.