Advertisment

மறு ஆய்வு மனுக்களை நானே விசாரிக்க ஐகோர்ட் தலைமை நீதிபதி அனுமதி: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவிப்பு

"எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான மறு ஆய்வு வழக்குகளை நானே விசாரிக்கலாம் என தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளார்" என்று உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Justice Anand venkatesh Superstitious belief Statue order

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான மறு ஆய்வு வழக்குகளை விசாரிக்கும்படி, தலைமை நீதிபதி, தனக்கே அனுமதி அளித்துள்ளார் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்துள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Justice Anand Venkatesh | Chennai High Court: தமிழக அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஐ .பெரியசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி ஆகியோரை சிறப்பு நீதிமன்றங்கள் சொத்து குவிப்பு மற்றும் முறைகேடு வழக்குகளில் இருந்து விடுவித்து பல்வேறு ஆண்டுகளில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புகளை மறுஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்தார். 

Advertisment

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமைச்சர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்து உச்சநீதிமன்றம், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ள வழக்குகளை எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என்பதை சென்னை  உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவு செய்ய வேண்டும் என்று கடந்த திங்கட்கிழமை உத்தரவிட்டது.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவிப்பு 

இந்த நிலையில், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிராக தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகள் நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (வியாழக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, முன்னாள், இந்நாள் அமைச்சர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளை விசாரிக்கும்படி, தலைமை நீதிபதி, தனக்கே ஒதுக்கீடு செய்துள்ளார். எனவே, அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிரான இந்த 4 வழக்குகள் பிப்ரவரி 27, 28,29, மற்றும் மார்ச் 5-ம் தேதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கின் விசாரணை பிப்ரவரி 12, 13ம் தேதியும், முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு பிப்ரவரி 19 முதல் 22ம் தேதி வரையும் விசாரிக்கப்படும் என்று உத்தரவிட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Chennai High Court Justice Anand Venkatesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment