தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து முன்னாள் டிஜிபி ஆர்.நட்ராஜ் வாட்ஸ் அப் குழுக்களில் அவதூறு பரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக திமுக வழக்கறிஞர் அணியை சேர்ந்த ஷீலா என்பவர் திருச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இந்தப் புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை வழக்கை ரத்து செய்யக் கோரி ஆர். நட்ராஜ் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கில் இருந்து நீதிபதி ஆனந்த வெங்கடேசன் விலகுவதாக அறிவித்தார். திமுகவை சேர்ந்த ஷீலா அளித்த புகாரின் அடிப்படையில் நட்ராஜ் மீது திருச்சி சைபர் க்ரைம் போலீசார் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த முறை நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நட்ராஜ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்பட்டது.
அப்போது நீதிபதி, சில கேள்விகளை காவல் துறையினரை பார்த்து எழுப்பியிருந்தார். நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் விலகலால், வேறொரு நீதிபதி முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“