ஜெயலலிதாவுக்கு ஆபரேஷன் செய்திருக்க வேண்டுமா? நீதிபதி ஆறுமுகசாமி விளக்கம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, அவருக்கு ஆபரேஷன் செய்திருக்க வேண்டுமா என்ற கேள்விக்கு, ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்திய ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஆறுமுகசாமி பதில் அளித்துள்ளார்.
கோயம்புத்தூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நீதிமன்ற வளாகத்தில் மறைந்த மூத்த வழக்கறிஞர் நடன சபாபதியின் திருவுருவப்படம் திறக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
Advertisment
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நீதியரசர் ஆறுமுகசாமி கலந்து கொண்டார். நீதியரசர் ஆறுமுகசாமி மேடையில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
இந்த நிகழ்வுக்கு பின்னர், நீதியரசர் ஆறுமுகசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “இங்குள்ள வழக்கறிஞர்கள் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான அறிக்கை பற்றிய என்னிடம் கேட்டார்கள். நீங்கள் சொல்லும் முடிவை எப்படி எடுத்துக் கொள்வது என்றும் கேட்டார்கள். அதற்கு நான் சொல்வது என்னவென்றால், அம்மாவின் வயது 68, உயரம் 5 அடி, எடை 100 கிலோ, சர்க்கரை அளவு 228 மில்லிகிராம், பி.பி. 160,கிரியேடின் 0.82, ஒபிசிட்டி, சுகர், பிபி இதற்கு சர்ஜரி செய்யலாமா என்பதுதான் முக்கிய விசயம். அவரது உடற்பருமன், சர்க்கரை அளவு , ரத்த அழுத்தம் இதற்கு அறுவை சிகிச்சை செய்யலாமா என்பதுதான் பாயிண்ட். இதை நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்” என தெரிவித்தேன்.
லேப்டாப் முன் உட்காருங்கள், இதனை எழுதுங்கள். இதனை கம்ப்யூட்டரில் அடியுங்கள் .இதே மாதிரி ஒருவர் உயிருடன் இருப்பது போல ஒரு மருத்துவரை வைத்து உலகில் உள்ள எந்த மருத்துவமனையில் வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள். முடிவு எதுவாக இருக்கும் என்று நீங்களே ஆய்வின் அறிக்கையை பரிசோதனை செய்து கொள்ளலாம் என தெரிவித்தேன். இவ்வாறு நீதியரசர் ஆறுமுகசாமி. தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”