/tamil-ie/media/media_files/uploads/2020/10/cats-3.jpg)
DMK MP Kanimozhi met the couples who participated in Chennai rally : ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை நிகழ்வுக்கு எதிராக சென்னையில், கனிமொழி தலைமையில் திமுக மகளிர் அணியினர் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தை நடத்தியதற்காக பிறகு கனிமொழி கைது செய்யப்பட்டார். இந்த போராட்டத்தில் அனைவரையும் ஈர்த்தது ஒரு கைக்குழந்தையுடன் போராட்டத்தில் பங்கேற்ற இளம் தம்பதியினர் தான்.
இந்த பேரணி சின்னமலையில் துவங்கி கிண்டி ராஜ்பவன் வரை நடைபெற்றது. திமுக தலைவர் முக ஸ்டாலின் இந்த பேரணியை துவங்கி வைத்தார். காவல்துறையின் தடையை மீறி போராட்டம் நடத்தியதால் கனிமொழியை கைது செய்தனர்.
கையில் குழந்தை ஒரு பக்கம், மெழுகுவர்த்தி மறுபக்கமாக வைத்துக் கொண்டு இருவரும் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் அடுத்த நாள் சமூக வலைதளங்களில் தலைப்பு செய்தி ஆனார்கள் என்று தான் கூற வேண்டும். அவர்களை தேடி கண்டுபிடித்து நேரில் சென்று பார்வையிட்டுள்ளார் தூத்துக்குடி தொகுதி எம்.பி. கனிமொழி. தற்போது இந்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.