Advertisment

'தேர்வு நேரத்தை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப முடியுமா?' - நீதிபதி கிருபாகரன்

தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு எவ்வளவு குறைந்த ஊதியத்தில் அதிக வேலைப்பளு கொடுக்கப்படுகிறது என்பது தெரியுமா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Latest political news live updates

Latest political news live updates

தேர்வு நேரத்தை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப முடியுமா? என ஆசிரியர் சங்கங்கள் நாளை பதில் அளிக்க ஐகோர்ட் கேட்டுக் கொண்டுள்ளது.

Advertisment

ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப அரசு எடுத்த நடவடிக்கை குறித்து தமிழக பள்ளிக் கல்வி துறையும் தெரிவிக்க வேண்டும் என நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து கடந்த 2017 ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கில் ஆசிரியர்கள் சங்கங்கள் ஏற்கனவே பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கு இன்று நீதிபதி கிருபாகரன் முன் மீண்டும் விசாரனைக்கு வந்த போது ஆசிரியர் சங்கங்களின் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கிருபாகரன் பல கேள்விகளை எழுப்பினார்.

ஜாக்டோ ஜியோ சார்பில் ஆசிரியர்கள் நடத்தும் போராட்டத்தால் ஏழை, எளிய கிராமப்புற மாணவர்கள் தான் பாதிக்கபடுகின்றனர். போரட்டத்தில் ஈடுபடுபவர்கள் மாணவர்களின் நலனில் அக்கறை இல்லையா? என கேள்வி எழுப்பினார்.

மருத்துவர்கள் போராட்டம் நடத்தினால் நோயாளிகள் பாதிக்கப்படுவர்கள், காவல்துறையினர் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் அடுத்த தலைமுறையே பாதிக்கப்படும் என தெரிவித்தார்.

தொழிலாளர் போல் சாலையில் இறங்கி போரடுவது ஆசிரியர்களுக்கு அழகா? என்ற நீதிபதி

கற்பிப்பது தான் உங்கள் பணியின் நோக்கம் என்றால், தேர்வு நேரம் தான் போராட்டத்திற்கான நேரமா?

தனியார் பள்ளியில் படிக்கும் பெரும்பாலான ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு போராட்டத்தை கைவிடும் வரை அவர்களுக்கு பாடம் கற்பிக்க கூடாது என உத்தரவிட்டால் அதனை ஏற்பிற்களா? என கேள்வி எழுப்பினார்.

தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு எவ்வளவு குறைந்த ஊதியத்தில் அதிக வேலைப்பளு கொடுக்கப்படுகிறது என்பது தெரியுமா?

உயர் நீதிமன்றத்தில் 6,500 ரூபாய் ஊதியத்திற்கான துப்புரவு பணியாளர்கள் மற்றும் 18 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு அலுவலக உதவியாளர் பணிகளுக்கு எத்தனை பட்டதாரிகளும், பட்ட மேற்படிப்பு முடித்தவர்களும் போட்டியிடுகிறார்கள் தெரியுமா?

கூரியர், உணவகங்கள் மற்றும் சுவிகி போன்ற நிறுவனங்களில் எத்தனை பட்டதாரிகள் வேலை செய்கிறார்கள் தெரியுமா?

அரசியல்வாதிகளை திட்டுகிறார்கள். ஆனால் தாங்கள் எப்படி செயல்ப்படுகிறார்கள் என்பதை ஆசிரியர்கள் உணர்ந்து பார்க்க வேண்டும் என கருத்து தெரிவித்தார்.

போராட்டத்தில் ஈடுபடும் சங்க நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் அமைச்சர்கள், ஆட்சியர்கள், உயர் அதிகாரிகளை சரமாரியாக ஆசிரியர்கள் வசைப்பாடுவது சரிதானா? தேர்வு நேரத்தை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் கல்வியாண்டு முடியும் வரை தள்ளி வைக்க முடியுமா? என நாளை மதியம் விளக்கமளிக்க ஆசிரியர்கள் சங்கங்கள் தெரிவிக்க வேண்டும் தெரிவித்தார்.

ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஒவ்வொரு ஆண்டும் கிடப்பில் போடுவது ஏற்க முடியாது தமிழக அரசு அதில் கவனம் செலுத்தி உரிய தீர்வை காண நீதிபதி கிருபாகரன் அறிவுறுத்தினார்.

ஏற்கனவே ஜாக்டோ ஜியோ போராட்டம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆகியவற்றில் டிவிசன் பெஞ்சில் இரண்டு வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதால் இதனை உத்தரவுகளாக பிறப்பிக்காமல் மாணவர்கள் நலன் கருதி அறிவுறுத்தல்களை மட்டுமே வழங்குவதாக நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார். எனவே மாணவர்கள் நலன் கருதி போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் தனது போரட்டத்தை கைவிட வேண்டும் எனவும் வலியுத்துவதாகவும் நீதிபதி கிருபாகரன் தெரிவித்து வழக்கை செவ்வாய் கிழமைக்கு (ஜன.29) தள்ளிவைத்தார்.

Chennai High Court Jacto Geo Justice Kirubakaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment