Madras HC Justice Kirubakaran news in tamil: சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக பணியாற்றிய நீதிபதி என்.கிருபாகரன் ஓய்வு பெற்றார். முஹர்ரம் பண்டிகையையொட்டி வெள்ளிக்கிழமை (இன்று) விடுமுறை என்பதால் அவருக்கு நேற்று (வியாழக்கிழமை - ஆகஸ்ட் 20 அன்று) நீதிமன்றத்தால் பிரியாவிடை அளிக்கப்பட்டது.
நீதிபதி கிருபாகரன், மார்ச் 31 2009ல் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 2011ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் இதுவரை 492 தீர்ப்புகளை வழங்கியுள்ள நிலையில் பிற நீதிபதிகளால் வழங்கப்பட்ட தீர்ப்புகளில் இவரது 143 தீர்ப்புகள் மேற்கோள் காட்டி வழங்கப்பட்டுள்ளன.
'மக்கள் நீதிபதி'
'மக்கள் நீதிபதி' என்று அழைக்கப்படும் நீதிபதி கிருபாகரன் சர்ச்சைக்குரிய பிரச்சினைகளில் தனது கருத்தை பதிவு செய்ய தவறியதில்லை. குறிப்பாக பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை ஆதரித்து, மருத்துவ சேர்க்கைக்கான தேசிய தகுதி-நுழைவுத் தேர்வு (நீட்) அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாக மாணவர்களின் தற்கொலைகள் அரசியலாக்கப்படுவதை விமர்சித்தது, கட்டாய ஹெல்மெட், டிக்டாக் - ஆன்லைன் ரம்மிக்குத் தடை மற்றும் கொரோனா காலத்தில் உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கையை வெளிப்படுத்துமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது என அடுக்கிக்கொண்டே போகலாம்.
தவிர, பல்வேறு டிவிஷன் பெஞ்சுகளுக்கு தலைமை வகித்த இவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மருமகள் ஜெ.தீபா மற்றும் மருமகன் ஜெ.தீபக் ஆகியோரை அனைத்து சொத்துக்களையும் வாரிசுரிமை பெற்ற சட்டப்பூர்வ வாரிசுகளாக அறிவித்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளான எஸ்.நளினி மற்றும் அவரது கணவர் ஸ்ரீஹரன் என்ற முருகன் இலங்கை மற்றும் இங்கிலாந்தில் உள்ள தங்கள் உறவினர்களுடன் தொலைபேசியில் பேச அனுமதித்தது போன்றவை முக்கியனவாக பார்க்கப்படுகின்றன.
பரிந்துரை
பாலியல் பலாத்காரம் செய்தவரின் ஆண்மையை அகற்றுவது, சேவல் சண்டை தடை, டிக்டாக் தடை செய்தல், வெறுப்பு அரசியலுக்கு எதிராக பேசுவது, அரசு நடத்தும் பல மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்டது, கனரக வாகனங்களில் வேக கவர்னர்களை நிர்ணயிப்பது போன்ற முக்கிய பரிந்துரைகளை செய்துள்ளார் நீதிபதி கிருபாகரன். மேலும், போலீசாருக்கு வாராந்திர விடுமுறை நாட்களை வழங்குவதற்கும், அவர்களது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதற்கு விடுப்பு வழங்குவதற்கும் பரிந்துரைத்திருந்தார்.
அதோடு, தொல்பொருள் அகழ்வாராய்ச்சி மற்றும் தமிழர்களின் வரலாற்றைப் படிக்க போன்வற்றிற்கு தனது ஆதரவு கருத்தை பதிவு செய்துள்ளார் நீதிபதி கிருபாகரன்.
விமர்சனம்
தனியார் பள்ளி ஆசிரியர்களுடன் ஒப்பிடுகையில் நல்ல சம்பளம் வாங்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டங்களில் ஈடுபடுவது ஏன் என்பது போன்ற கேள்விகளை எழுப்பிய நீதிபதி கிருபாகரன் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டார்.
மக்கள் நலனுக்கான கோரிக்கை
நேற்று நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட பிரியாவிடை நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி கிருபாகரன் மக்கள் நலனுக்கான சில கோரிக்கைகளை வைத்தார். அதில், மக்களுக்காக அரசு மதுபானக் (Clinking beer mugs) கடைகளை மூட வேண்டும். முழுமையாக இல்லாவிட்டாலும் பாதியாகவாவது குறைக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொண்டார்.
மேலும் அவர் பேசுகையில், "நாட்டில் ஒரே ஒரு உச்ச நீதிமன்ற பெஞ்ச் (புது டெல்லியில்) இருப்பது நாட்டு மக்களுக்கு ஏற்படுத்தப்படும் அநீதி. அவை போன்ற பெஞ்சுகள் நாடு முழுவதும் நிறுவப்பட வேண்டும்.
திருமண விவகாரங்களில் அந்த தம்பதியினரை காவல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம். விவாகரத்துக்காக ஒரு தம்பதியினர் உங்களை (வழக்கறிஞர்களை) அணுகும்போது அவர்களுடன் பேசி அனுப்பி வைக்கவும். ஒற்றை பெற்றோர் கருத்து குழந்தைகளுக்கு நல்லதல்ல. குழந்தைகளின் எதிர்காலம் உயர இதை வழக்கறிஞர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.