Justice S Vaidyanathan | CJ of Mehalaya High Court | உச்ச நீதிமன்ற கொலீஜியம் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், உத்தரகாண்ட், ஒரிசா, மேகாலயா ஆகிய உயர் நீதிமன்றங்களுக்கு மூன்று புதிய தலைமை நீதிபதிகளை நியமிக்குமாறு அரசுக்கு வியாழக்கிழமை (நவ.2) பரிந்துரை செய்தார்.
உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீதிபதி ரிது பஹ்ரியை நியமிக்க பரிந்துரை செய்துள்ளது. அங்கு பணியில் இருந்த நீதிபதி விபின் சங்கி அக்டோபர் 26 அன்று ஓய்வு பெற்றார்.
நீதிபதி சுபாசிஸ் தலபத்ரா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அக்டோபர் 3ஆம் தேதி முதல் காலியாக உள்ள ஒரிசா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீதிபதி சக்ரதாரி சரண் சிங்கை கொலீஜியம் முன்மொழிந்துள்ளது. நீதிபதி சிங், பாட்னா உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக உள்ளார்.
பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி பஹ்ரி உத்தரகண்ட் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேகாலயா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ். வைத்தியநாதன் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். நவம்பர் 1-ம் தேதி நீதிபதி சஞ்சிப் பானர்ஜி ஓய்வு பெற்றதையடுத்து மேகாலயா உயர் நீதிபதி பதவி காலியானது.
இந்த நிலையில், கொலீஜியம் தனது தீர்மானத்தில் நீதிபதி வைத்தியநாதனின் பெயரை பரிந்துரைக்கும் போது, நாட்டின் மிகப்பெரிய உயர் நீதிமன்றங்களில் ஒன்றான சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளில் ஒரே ஒரு தலைமை நீதிபதி மட்டுமே பிரதிநிதித்துவம் செய்கிறார் என்பதை கருத்தில் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“