/indian-express-tamil/media/media_files/2025/05/07/YV6t6b89S6UckQpXWXDU.jpg)
ஐகோர்ட் நீதிபதி சத்யநாராயண பிரசாத் திடீர் மரணம்
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்ய நாராயண பிரசாத் செவ்வாய்க்கிழமை (மே 6) சென்னையில் காலமானார். உயர்நீதிமன்றத்தில் தற்போது பணியாற்றும் 63 நீதிபதிகளில் 56 வயதான இவர் சீனியாரிட்டியில் 42 வது இடத்தில் உள்ளார்.
செவ்வாய்க்கிழமை மாலை சென்னையில் உள்ள தனது இல்லத்தில் அசௌகரியம் இருப்பதாக உணர்ந்த சத்ய நாராயண் பிரசாத், உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும் தெரிகிறது. அரக்கோணம் அருகே உள்ள மின்னல் கிராமத்தைச் சேர்ந்த சத்ய நாராணய பிரசாத், மார்ச் 15, 1969-ல் தஞ்சாவூரில் பிறந்தார். இவரது தந்தை ஜெய்பிரசாத் ஓய்வு பெற்ற மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக இருந்தார்.
சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் வரலாற்றில் இளங்கலை பட்டம் பெறுவதற்கு முன்பு வேலூரில் உள்ள வோர்ஹீஸ் மேல்நிலைப் பள்ளியில் படித்த நீதிபதி பிரசாத், டெல்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முதுகலைப் பட்டமும், சட்டப் பட்டமும் பெற்றார். 1997-ல் வழக்கறிஞராக பதிவு செய்து 2000-ம் ஆண்டு வரை வழக்கறிஞர் இளங்கோவிடம் பணியாற்றினார். சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகம், கோயம்புத்தூர் மாநகராட்சி, இந்திய உணவுக் கழகம் மற்றும் பல அமைப்புகளின் நிலையான ஆலோசகராக பணியாற்றினார். 2021-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார் சத்ய நாராயண பிரசாத்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.