Advertisment

திருச்சியில் தொடர் வழிப்பறி; பட்டாக்கத்தியால் போலீசை தாக்கிய சிறார்கள்!

போலீசாரை கண்ட மூன்று நபர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனாலும் போலீசார் அவர்களை விடாமல் துரத்தி சென்று அண்ணாசிலை பகுதி அருகே பிடிக்க முயன்றனர். அப்போது,

author-image
WebDesk
New Update
 Arrest of children with pistols in Trichy

திருச்சியில் போலீசை தாக்கிய சிறார்கள்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

திருச்சி மாநகரப் பகுதிகளில், கடந்த 23ஆம் தேதி, ஒரே இரவில் மட்டும் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு என்று, 10குற்ற சம்பவங்கள் பதிவாகின. அதையடுத்து, அன்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட, 88பேருக்கு மெமோ கொடுக்க, திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி அதிரடியாக உத்தரவிட்டார்.

அதன்பிறகு அனைவரிடமும் எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கிக் கொண்டு, ‘இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நிகழக் கூடாது’ என்று எச்சரித்து அனைவரையும் அனுப்பி வைத்தார். அதைத் தொடர்ந்து, திருச்சி மாநகரப் பகுதிகளில் இரவு நேர ரோந்து பணிகளை காவலர்கள் தீவிரப்படுத்தி உள்ளனர். 

இந்நிலையில், இன்று அதிகாலை, கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஓயாமரி சுடுகாடு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருச்சி கலைஞர் அறிவாலயம் பகுதியில் மர்ம நபர்கள் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதாக வந்த தகவலையடுத்து,  திருச்சி கோட்டை காவல் நிலைய முதல் நிலைக் காவலர் அப்துல் காதர் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

போலீசாரை கண்ட மூன்று நபர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனாலும் போலீசார் அவர்களை விடாமல் துரத்தி சென்று அண்ணாசிலை பகுதி அருகே பிடிக்க முயன்றனர். இதில் ஆத்திரமடைந்த மர்ம நபர்களில் ஒருவன் தான் கையில் வைத்திருந்த பட்டா கத்தியால் அப்துல் காதரின் வலது கை, கன்னத்தில் வெட்டியதில் படுகாயம் அடைந்த காவலர் மயங்கி கீழே சரிந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வழிப்பறியில் ஈடுபட்ட மூவரும் தப்பியோடிவிட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், தப்பியோடிய மூவரையும் சுற்றி வளைத்து பிடிக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று சிறார்கள் தற்போது கைது செய்யப்பட்டு ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வழிப்பறி தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை மடக்கி பிடிக்க முற்பட்டபோது காவலர் தாக்கப்பட்ட சம்பவம் திருச்சி போலீசாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீப காலங்களில் திருச்சி மாநகரத்தில் போலீசார் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். காயமடைந்த அப்துல் காதர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

குறிப்பாக கோயமுத்தூர், திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து திருச்சிக்கு வரும் பேருந்துகள் நள்ளிரவில் சத்திரம்பேருந்து நிலையம் சென்று பயணிகளை இறக்கி விடாமல் கலைஞர் அறிவாலயம் பகுதியில் இறக்கிவிட்டு திருச்சி மாநகருக்குள் வருகின்றன. இதனால் 500 மீட்டர் தொலைவில் உள்ள சத்திரம் பேருந்துக்கு பயணிகள் நடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதை பயன்படுத்தி வழிப்பறியில் மற்றும் திருடர்கள் பேருந்து பயணிகள் மற்றும் ஐடி நிறுவன ஊழியர்கள் ஆகியோரிடம் செல்போன், செயின் பறிப்பில் ஈடுபட்டு வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனால் இரவு நேரங்களில் அப்பகுதியில் செல்வதற்கே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இதனை தடுக்க மாநகர காவல் துறையினர் இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisment

செய்தியாளர் க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Tiruchirappalli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment