கூட்டணியின் பெயரால் காங்கிரஸ் அவமரியாதை செய்யப்படுவதை ஏற்க முடியாது: செந்தில் பாலாஜிக்கு ஜோதிமணி எம்.பி கண்டனம்

கூட்டணி பெயரால் காங்கிரஸை அவமரியாதை செய்வதாக ஜோதிமணி எம்பி கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கூட்டணி பெயரால் காங்கிரஸை அவமரியாதை செய்வதாக ஜோதிமணி எம்பி கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
jothimani senthilbalaji

மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சி நிர்வாகியுமான ஜோதிமணி, திமுக கரூர் மாவட்டச் செயலாளர் செந்தில் பாலாஜியின் சமூக ஊடக பதிவு குறித்து எக்ஸ் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்தார். செப்டம்பர் 23, 2025 அன்று அர்ஜென்டினாவில் நடந்த அரசியல் மாநாட்டில் பங்கேற்கச் சென்றிருந்ததால், செந்தில் பாலாஜியின் காங்கிரஸை அவமதிக்கும் வகையிலான பதிவுக்கு உடனடியாக பதிலளிக்க முடியவில்லை என்று ஜோதிமணி கூறினார்.

Advertisment

திமுக கரூர் மாவட்டச் செயலாளர் செந்தில் பாலாஜி, காங்கிரஸ் கட்சியை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவு, இந்தக் கூட்டணி உறவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்திற்கு உடனடியாகப் பதிலளிக்க முடியாததற்கு வருத்தம் தெரிவித்த ஜோதிமணி, செந்தில் பாலாஜியின் செயல் கூட்டணி தர்மத்திற்கு எதிரானது என்று ஆணித்தரமாகக் கூறினார்.

மேலும் தனது பதிவில், "சில தினங்களாக காங்கிரஸ் கட்சி சார்பாக அர்ஜெண்டினாவில் நடைபெற்ற அரசியல் மாநாட்டில் பங்கேற்க வேண்டியிருந்ததால் கரூர் மாவட்ட திமுக மாவட்ட செயலாளர்  திரு. செந்தில் பாலாஜி  அவர்களின் இந்தப் பதிவு குறித்து உடனடியாக எதிர்வினையாற்ற முடியவில்லை. 

கூட்டணி தர்மம் என்பது இரண்டு பக்கமும் இருக்க வேண்டும். திமுக வின் மாவட்ட செயலாளர், ஒரு முன்னாள் அமைச்சர்  காங்கிரஸ் கட்சியை இப்படி பொதுவெளியில் அவமதிப்பதை நாங்கள் எப்படிப் புரிந்துகொள்வது? கூட்டணியின் பெயரால் இதுபோன்ற அவமரியாதையை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இப்படி நடப்பது இது முதல் முறையல்ல.

Advertisment
Advertisements

கூட்டணி என்பது ஒரு கொள்கை அடிப்படையில்,பரஸ்பர புரிதல்,ஒத்துழைப்பு,நம்பிக்கை   மற்றும் மரியாதையின் அடிப்படையில்  உருவாக்கப்படுவது. எந்தச் சூழலிலும் இதில் எதனோடும்  சமரசம் செய்துகொள்ள முடியாது. 

கரூர் நாடாளுமன்றத் தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் இதற்கு எதிர்வினையாற்ற வேண்டிய ,காங்கிரஸ் கட்சியின் சுயமரியாதையைக் காப்பாற்ற வேண்டிய  கடமையும்,பொறுப்பும் எனக்கு இருக்கிறது. இம்மாதிரியான அவமரியாதயை எளிதில் கடந்து போய்விட முடியாது. 

கூட்டணிக்குள் இதுபோன்ற கசப்பான சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அண்ணன் திரு. செல்வப் பெருந்தகை அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்,மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள். கவனத்திற்கு எடுத்துச் செல்வார் என்று நம்புகிறேன். 

தமிழ்நாட்டின் மொழி,இனம், பண்பாடு , எதிர்காலம் அனைத்திற்கும் பாசிச சக்திகளால் நெருக்கடி ஏற்பட்டிருக்கிற இன்றைய அரசியல் சூழலில் நம்  அனைவருக்கும், தமிழ்நாட்டு மக்களின் நலனை முன்னிறுத்திச் செயல்பட வேண்டிய கடமையும்,பொறுப்பும் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதுவே தமிழ்நாட்டிற்கு நன்மை செய்யும்" என்று தெரிவித்து இருந்தார்.

Jothimani senthil balaji

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: