தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக, வணிகவரி மற்றும் பதிவுத் துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி நியமனம் செய்து தமிழ்நாடு அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக இருந்த பழனிகுமார் வயது மூப்பு காரணமாக ஓய்வுபெற்ற நிலையில், புதிய தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ளாட்சி மற்றும் நகராட்சித் தேர்தல்களை நடத்துவது சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் பணி. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக உள்ள பழனிக்குமார் ஐ.ஏ.எஸ்-ன் பணிக்காலம் முடிவடைந்த நிலையில், அடுத்து தேர்தல் ஆணையராக நியமிக்கப்படப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜோதி நிர்மலாசாமி, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“