Advertisment

பேராசிரியர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அதிமுக - ஓபிஎஸ், ஜெயக்குமார் நேரில் சென்று அஞ்சலி

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனின் மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் திராவிட முன்னேற்றக் கழக கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கல்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பேராசிரியர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அதிமுக - ஓபிஎஸ், ஜெயக்குமார் நேரில் சென்று அஞ்சலி

மறைந்த திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் அரசியல்வாதி, ஆசிரியர், மேடை பேச்சாளர், எழுத்தாளர், தொழிற்சங்கவாதி, சமூக சீர்திருத்தவாதி போன்ற பன்முகத் தன்மையை வெளிப்படுத்தியவர் என்று தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது இரங்கல் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisment

முதல்வர் எடப்பாடி க. பழனிசாமி இரங்கல் கடிதத்தில் உள்ள விவரங்கள் பின்வருமாறு:  

தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல்வாதியும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான, பேராசிரியர் க.அன்பழகன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 7.3.2020 அதிகாலை காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

பேராசிரியர் க.அன்பழகன் தனது இளம் வயதிலேயே அரசியலில் அதிக ஆர்வம் கொண்டவர். கலைஞர் கருணாநிதியின் அரசியல் பயணத்தின் நெடுகிலும் உற்ற தோழராகவும், திராவிட இயக்கக் கொள்கைகளிலிருந்து விலகாத உறுதி மிக்க மூத்த அரசியல்வாதியாகவும் விளங்கியவர். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஆரம்ப காலம் முதலே முக்கிய பங்கு வகித்தவர் என்ற பெருமைக்குரியவர். பேராசிரியர் க.அன்பழகன் 1957-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக முதன் முறையாக போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் அடியெடுத்து வைத்தவர் என்ற பெருமைக்குரியவர்.

பேராசிரியர் க.அன்பழகன் 43 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராகவும். அரைநூற்றாண்டு காலத்திற்கும் மேலாக தமிழ்நாட்டு அரசியலில் தடம் பதித்து வந்தவர். ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமைக்குரியவர். இவர் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகிய பதவிகளில் திறம்பட பணியாற்றியவர்.

அரசியல்வாதி, ஆசிரியர், மேடை பேச்சாளர், எழுத்தாளர், தொழிற்சங்கவாதி, சமூக சீர்திருத்தவாதி போன்ற பல பரிமாணங்களை கொண்டு தனது பன்முகத் தன்மையை வெளிப்படுத்தியவர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனின் மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திராவிட முன்னேற்றக் கழக கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா சாந்தியடைய நான் பிரார்த்திக்கிறேன்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரங்கல் கடிதத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார் :  

திராவிட இயக்கத்தின் கொள்கைகளில் ஆழமான நம்பிக்கை கொண்டவரும், தந்தைப் பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் போன்ற திராவிட இயக்க முன்னோடித் தலைவர்களுடன் நெருக்கமான தொடர்பும், நட்பும், கொண்டிருந்தவரும், மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி அவர்களின் இணைந்து அரசியலில் பயணித்தவரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் மறைந்தார் என்ற செய்து கேட்டு மிகவும் வருத்தமுற்றோம்.

தமிழ்ப் பற்றும், தேசிய உணர்வும் கொண்ட குடும்பத்தில் பிறந்த பேராசிரியர் அன்பழகன் அவர்கள் கல்லூரிப் பேராசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, மக்களாட்சியின் அனைத்து நிலைகளிலும் பங்குபெற்று பணியாற்றிய சிறப்புக்குரியவராவார். பேராசிரியர் தமிழ்நாடு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அமைச்சராகவும், உறுப்பினராகவும் பணியாற்றிய ஆண்டுகளில், அவரது தமிழ்ப் புலமையையும், பெருந்தன்மையான உரைகளையும், கொள்கை மாறாத நட்புறவையும், வியப்புக்குரிய உழைப்பையும் கண்டு வியந்திருக்கிறோம். 75 ஆண்டுகள் பொது வாழ்வில் பங்குபெற்று அயாரது உழைத்து விடைபெற்றுச் சென்றிருக்கும் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் மறைவு தமிழக அரசியலுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு.

பேராசிரியர் அன்பழகன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,  திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒபிஎஸ்- ஜெயக்குமார் நேரில் சென்று அஞ்சலி:

இன்று மாலை 3 மணியளவில் கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலையில் (வாட்டர் டேங் ) இருக்கும் அன்பழகனின் இல்லத்திற்கு சென்று, தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வமும், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

Aiadmk Edappadi K Palaniswami Paneerselvam K Anbazhagan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment