Advertisment

'ஒரு நாடு, ஒரு மொழி கொள்கை: பிரதமர் உள்பட எந்த பாஜக தலைவருக்கும் இதில்  நம்பிக்கையில்லை' : அண்ணாமலை

”பிரதமர் உள்பட மூத்த தலைவர்களில் ஒருவர்கூட ஒரு மொழி, ஒரு நாடு என்ற நிலைபாட்டை ஆதரிக்கவில்லை.” - அண்ணாமலை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அண்ணாமலை

அண்ணாமலை

தமிழக  பாஜக  தலைவர் அண்ணாமலையிடம், இந்தியன் எக்ஸ்பிரஸ் உதவி ஆசிரியர் அருண் ஜனார்தனன் எடுத்த நேர்காணலின் தொகுப்பு இது.

Advertisment

ஐ.பி,எஸ் அதிகாரி பணியை நீங்கள் ராஜினாமா செய்யலாம் என்று யோசித்தபோது, முதலில் ரஜினிகாந்த் கட்சியில் இணைவதாக இருந்தது என்று கூறப்படுகிறது. மேலும் ரஜினிகாந்த் கட்சி தொடங்காததால் நீங்கள் பாஜகவில் இணைந்ததாக கூறப்படுகிறது? இது உண்மையா?

அரசியல் கட்சியில் இணைவதற்காக நான் வேலையை ராஜினாமா செய்யவில்லை. எனக்கு அரசியல்வாதிகள் என்றாலே ஒருவித ஒவ்வாமை ஏற்படும். 9 அரை வருடங்களாக காவல்துறை அதிகாரியாக இருந்தநான் . அரசியலின் மறுபக்கத்தில் நான் இருந்தேன். பதவி விலகிய உடனே நான் அரசியல் கட்சியில் சேர விரும்பவில்லை. நான் நான் அடிமட்டத்திற்கு செல்ல வேண்டும் என்று நினைத்தேன். மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்பதால்தான்  ” we the leaders” என்ற அறக்கட்டளையை தொடங்கினேன். அதன் பிறகுதான் சில தலைவர்களை சந்தித்தேன், அவர்கள்தான் என்னை அரசியலுக்கு வர வேண்டும் என்று மன மாற்றம் செய்தார்கள். குறிப்பாக அரசியலில் சில லட்சியங்களை விரைவாக செயல்படுத்த முடியும் என்று அவர்கள்தான் கூறினார்கள். நான் நடிகை ரஜினிகாந்தை சிலமுறை பார்த்திருக்கிறேன். அவரது கட்சியில் சேர்வதற்காக அவரை சந்திக்கவில்லை. பொதுவாக நிறைய விஷயங்களை பேசியிருக்கிறோம். தற்போது வரை ஒரு நல்ல நட்பு எங்களுக்குள் இருக்கிறது.

இப்போது நீங்கள் ஒரு முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி. உங்களது கடந்த காலம், நிகழ்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா?

அரவகுறிச்சி சட்டமன்ற தேர்தலில் நான் தோல்வியடைந்த போது, நான் நிறைய பேரிடம் பேசினேன். ஒரு காவல்துறை அதிகாரியாக இருந்துவிட்டு அரசியலில் வந்திருப்பது ஒரு பெரிய தடையாக இருப்பதாக சொன்னார்கள். ஒரு காவல்துறை அதிகாரியிடம் இருக்கும் அழுத்தமான குணம் மக்களுக்கு தேவைப்படுவதில்லை. ஒரு காவல்துறை அதிகாரி நேரடியாகவே எல்லாவற்றையும் சொல்லிவிடுவார். மேலும் மக்களை நம்மை சோதனை செய்வார்கள். வெறும் 10 அல்லது 15 வருடங்கள் மட்டுமே நான் இருப்பேனே, அல்லது மூவதுமாக இங்கேதான் இருப்பேனா என்ற கேள்வி அவர்களிடம் இயல்பாக எழும். தற்போது கூட என்னை விமர்சிக்க நினைப்பவர்கள், நான் ஒரு காவல்துறை அதிகாரியாக நடந்துகொள்கிறேன் என்றுதான் கூறுகிறார்கள். ஆனால் 9 வருடங்கள் காவல்துறை அதிகாரியாக  பணியாறியதால் மனிதர்களின் குணங்கள்  பற்றி எனக்கு நன்றாக தெரியும்.

தமிழகத்தை பொருத்தவரை பாஜக ஒரு வட இந்திய கட்சி. உயர் சாதிக் கட்சி. தமிழகத்தில் திராவிடம், தமிழ் தேசியம் இருக்கிறது. தமிழகத்தில் பாஜகவை பிரபலமாக்க உங்கள் திட்டம் என்ன?

தமிழகத்தில் தேசிய கட்சிக்கு முக்கிய பங்கு இருக்கிறது. 2014ம் ஆண்டு பிரதமர் மோடி முதல் முறையாக வெற்றிபெறும்போது, பாஜக 19% வாக்குகளை பெற்றது. திமுகவினர் மிக குறைவாக  23 % பெற்றனர். தமிழகத்தில் தேசிய கட்சியின் தேவை இருக்கிறது. தமிழகத்தில் தலைவர்களை உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது. அவர்கள் 20 முதல் 30 வருடங்கள் பயணிக்க வேண்டும். ஒருவேளை பாஜக கட்சி வேறு வேலைகளை எனக்கு ஒதுக்கினாலும் அதை செய்வேன். ஆனால் நான் தமிழகத்தில் இருக்கவே விரும்புகிறேன். நான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. டெல்லி சென்று மீண்டும் தமிழகத்திற்கும் வரும் தலைவராக நான் இருக்க விரும்பவில்லை.

கர்நாடகாவில் ஏற்பட்ட தோல்விக்கு, தேர்தல் பிரச்சாரத்தில் டெல்லியின் அதிக தலையீடு இருந்தது காரணமா? தோல்விக்கு என்ன காரணம்?

கர்நாடகாவின் அரசியல் சூழல் சிக்கலானது. 2013ம் ஆண்டில், எடியூரப்பாவின் தனிக் கட்சி கே.ஜே.பி மற்றும் ஜெ.டி (எஸ்) உள்ள கட்சிகளால் ஓட்டு பிரிக்கப்பட்டு காங்கிரஸ் வெற்றிபெற்றது. 2018ம் ஆண்டில் காங்கிராஸ் 2.5 % வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் முன்னிலையில் இருந்தாலும், 24 சீட்டுகளை பாஜக வென்றது.

கர்நாடகாவின் 6 இடங்களும் வெவ்வேறு மாதிரியான வாக்கு செலுத்தும் முறையை கொண்டது. தெற்கு கர்நாடகத்தில், மைசூரு முதல் ராமநகரம் வரை 64 சீட்டுகளை கொண்டுள்ளது. இங்கே ஜே.டி (எஸ்)  கட்சிக்கு வாக்கு வங்கி அதிகம். வட கர்நாடகாவில்  பாஜகவிற்கு ஆதரவு அதிகரித்துகொண்டுள்ளது. 2018ம் ஆண்டு, மத்திய கர்நாடகாவில் பாஜகவின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. கர்நாடகாவின் கடற்கரை பகுதியில், பாஜகவிற்கு நல்ல வரவேறுப்பு இருக்கும், ஆனால் இந்த முறை அதிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஜே.டி ( எஸ்) வின் வாக்கு வங்கி 5 % வீழ்ச்சியடைந்தது. ஜே.டி ( எஸ்) வலுவாக பிரச்சாரம் செய்தபோதும் குறைவான வாக்குகள் கிடைத்தது. பாஜகவின் ஓட்டு விகிதம் வட கர்நாடாகவில் 2018-ல் 16 %, தற்போது 23 % ஆக உள்ளது. இந்த இடத்தில் காங்கிரஸ் கட்சி 18 முதல் 20 சீட்டுகளில் வெற்றிபெற்றது. எஸ்.சி இட ஒதுக்கீட்டை 3 % இருந்து, 7 % அதிகப்படுத்தியும், பெல்லாரி பகுதியில் பாஜக வெற்றியடைவில்லை. பெங்களூரில் பாஜக 17 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.

ஒட்டுமித்தமாக பாஜக தோற்றாலும் வாக்கு விகிதம் குறையவில்லை. பாஜக பல்வேறு கடினமான முடிவுகளை எடுத்தது. குமாரசாமி, எடியூரப்பா, பசவராஜ் பொம்மை என்ற மூன்று முதல்வர்கள் 5 வருடத்தில் ஆட்சி செய்தனர். இதனால்கூட மக்கள் குழப்பமடைந்திருக்கலாம்.

கர்நாடகா தேர்தலில் டெல்லி தலைமையின் தலையீடு துளியும் இல்லை. கர்நாடக பாஜகவின் தலைமையில்தான் எல்லா முடிவுகளும் எடுக்கப்பட்டது. அங்கிருக்கும் தலைமை கேட்டுக்கொண்டதால்தான்  மோடி அடிக்கடி, தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டார். அமித்ஷா மற்றும் யோகி ஆதித்தியநாத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட வேண்டும் என்று மக்கள் விருப்பப்பட்டனர்.  தேர்தல் பிரச்சாரம் மற்றும் அதையொட்டி நடந்த நிகழ்வை, ஷோபா கரந்த்லாஜே, பாஜக கர்நாடக மாநில தலைவர் நலின் குமார் கட்டீல், முன்னாள் முதல்வர்  எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆகியோர் திட்டமிட்டனர்.

பாஜக தலைவர்கள் ஒன்றாக இருக்கிறார்களா? தலைமையில் மாற்றம்  நேரத்திற்கு தகுந்தபடி நிகழ்கிறதா?

தலைமையில் மாற்றம் ஏற்படும்போது, சிக்கல் எழுகிறது. ஜகதீஷ் ஷட்டர் விஷயத்தை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். கர்நாடகாவை சேர்ந்த 5 முதல் 6 மூத்த தலைவர்கள் தலைமுறையாக மாற்றம் வேண்டும் என்று கருதினர். ஒரு உறுப்பினராக பாஜக எப்படி இயங்கும் என்பதை என்னால் சொல்ல முடியும் . பாஜகவிற்கு தேர்தல் வெற்றி முக்கியம் என்றாலும், அதன் உறுப்பினர்களை, தலைவர்களை கட்சி கைவிடாது. தமிழகத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள் 2 நிர்வாகிகள் ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர். ஆனால் இன்று அவர்கள் ஆளுநர்களாக உள்ளனர். ஜகதீஷ் ஷட்டரை கட்சி ஓரம்கட்டவில்லை.

தமிழகத்தில் பாஜக வெற்றி குறைவாக இருப்பதால், விரக்தியில். உள்ளீர்களா? மெதுவாக கட்சி வளர்வதால் பின்வாங்க முடிவு செய்துள்ளீர்களா?

பின்வாங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை. பொதுவெளியில் இதுகுறித்து நான் பேசவே இல்லை. தேர்தலில் எப்படி செயல்படுகிறோம் என்பதில்தான் கட்சியின் வெற்றி உள்ளது. உள்ளாட்சி தேர்தலில்  5,900 பாஜக வேட்பாளர்கள் தனியாக தேர்தலை சந்தித்தனர். அதில் சிலர் வெற்றிபெற்றனர், சிலர் தோல்வியடைந்தனர். கூட்டணியுடன் தேர்தல் சந்தித்தால், கட்சி தனியாக வளராது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் அரசியல் சூழல் வேறுபடும்.

தமிழ்நாட்டில் பாஜகவின் வேர்களை வளர்க்க முயற்சிக்கிறோம். அதிமுக, திமுக தமிழ்நாட்டின் பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. இதில் பாஜக, தமிழகம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளில் தலையிட வேண்டும். தேசிய அளவில் கவனம் செலுத்துவதால்,  மாநிலங்களின் தனிப்பட்ட முக்கியத்துவம் பாதிக்கப்படுகிறது. கர்நாடகாவில் பாஜக அட்சி செய்கிறது, அங்கே மேகதாது அணை கட்ட முயற்சிகள் நடக்கிறது. தமிழக பாஜக, இதனால் ஏற்படும் விளைவுகளை புரிந்துகொண்டு, தஞ்சாவூரில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தியது. தமிழர்கள், பெருமை கொள்ளும் வகையில் நாடாளுமன்றத்தில் சோழர்கள் செங்கோல் வைக்கப்பட்டது. இதுபோல எதிர்காலத்தில் தமிழக பிரச்சனையில் தலையிட முயற்சிகள் நடைபெறும்.

சமீபத்தில் தமிழகத்தில் 12 மணி நேரம் வேலை தொடர்பாக சட்ட திருத்தம் அறிவிக்கப்பட்டது, அது மீண்டும் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது. பாஜக இதுபோன்ற சட்ட திருத்தத்தை மேற்கொள்ளுமா?

 தொழிலாளர் சட்டத்தில் வரும் புதிய மாற்றங்களை பாஜக வரவேற்கிறது. நவீன தொழில்நுட்ப காலத்திற்கு ஏற்ப இந்த மாற்றம் நடைபெற வேண்டும்.  ஆனால் தமிழக அரசு இந்த மாற்றத்தை மக்களுக்கு கொண்டு சென்ற விதத்தில்தான் சிக்கல் இருக்கிறது. தொழிலாளர்களின் உரிமையை அதிகமாக பாதிக்கும் நோக்கில்  இது கொண்டுவரப்படுவதாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. கூடுதல் வேலை நேரத்திற்கு நாங்கள் ஒற்றுக்கொள்கிறோம். ஆனால் அது எல்லோருக்கும் பொருந்தும்படியாக இருக்க வேண்டும். மற்ற கட்சிகளை போல கண்மூடித்தனமாக இதை எதிர்க்கவில்லை.

புதிய பென்ஷன் திட்டத்தை தமிழகம் ஏற்றுகொண்டுள்ளது. இதில் தமிழக பாஜக நிலைபாடு என்ன?

புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு தமிழக பாஜக ஆதரவு அளிக்கிறது. இந்நிலையில் இந்த மாடல் மிகவும் நன்மை தரக்கூடியது. தனிப்பட்ட முறையில் இது உதவும் திட்டம் என்று நினைக்கிறேன்., ஓய்வூதிய நிதியை நாம் முதலீடு செய்ய பயன்படுத்த முடியும் என்பது மாற்றம் தரும் திட்டம்தான். இதை நாம் அரசு ஊழியர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

சமூக நீதியை நிலைநாட்ட தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளது. சில மாநிலத்தை சேர்ந்த கட்சிகள் சாதிவாரியான கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைகின்றனர். கர்நாடகாவில், பாஜக தோல்விக்கு, சாதிவாரியான கணக்கெடுப்பு தேவை என்று காங்கிரஸ் கேட்டதும் ஒரு காரணமாக அமைந்தது. சாதிவாரியான கணக்கெடுப்பு நடைபெறுமா?

கர்நாடகாவில், சித்தராமையா முதல்வராக இருந்தபோது, 2013 முதல் 18, காலக்கட்டத்தில் சாதிவாரியான கணக்கெடுப்பு நடைபெற்றது. ஆனால் இது தொடர்பாக எந்த தகவலும் வெளியே வரவில்லை. சாதி மற்றும் இட ஒதுக்கீடு என்று வரும்போது உச்சநீதிமன்றம், தகவலை வழங்க ஆதாரம் கேட்கிறது.  காங்கிரஸ் நடத்திய சாதிவாரியான கணக்கெடுப்பை அவர்கள்தான் வெளியிட வேண்டும். சாதிவாரியான கணக்கெடுப்பை எந்த அரசு செய்தாலும், அது சிக்கலில்தான் சென்று முடியும்.  நம்மைபோல ஜனநாயக நாட்டில், பல்வேறு சாதி மற்றும் சிறு குழுக்கள் உள்ளனர், இதில் நாம் எடுக்கும் கணக்கெடுப்பின் எண்ணிக்கையை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். நான் இது நடக்காது என்று சொல்லவில்லை. சாதிவாரியான கணக்கெடுப்பு எப்படி நடத்த வேண்டும் என்பதை மூத்த அரசியல்வாதிகளிடம் விட்டுவிடுவோம்.

பாஜகவின் ஒரு நாடு, ஒரு மதம், ஒரு மொழி கொள்கை தமிழகத்தில் எடுபடுமா? 1982 முதல் 1983 காலகட்டத்தில் இந்து முன்னணி பத்மநாபபுரத்தில் ஒரு சீட் பெற்றது. ஆனால் ஒரு சீட்கூட வெற்றிபெற முடியாத அளவில் பாஜகவை எது தடுக்கிறது?

பிரதமர் உள்பட மூத்த தலைவர்களில் ஒருவர்கூட ஒரு மொழி, ஒரு நாடு என்ற நிலைபாட்டை ஆதரிக்கவில்லை. புதிய கல்விக் கொள்கையும் இதைதான் சொல்கிறது.

மூன்று மொழி என்று வைத்துக்கொள்வோம். ஒன்று தாய் மொழி, இனியொன்று ஆங்கிலம், 3 வது நீங்கள் விரும்பும் பிராந்திய மொழியை தேர்வு செய்யலாம். பத்மநாபபுரத்தில் வெற்றி தொடர்பாக சரியான கேள்வி கேட்டுள்ளீர்கள். எதிர்காலத்தில் பாஜக தனித்து தேர்தலை சந்தித்தால் 40 இடங்களிலும் போட்டியிடுவோம். 2016 நாங்கள் தனியாக போட்டியிட்டோம், அப்போது சரியான தலைமையில்லை. சிலர் வெளியே சென்றனர். சிலர் கட்சிக்கு வந்தனர். சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரியில் நல்ல நிலையில் இருக்கிறோம். வருகின்ற பாராளுமன்ற  தேர்தலில் வெற்றி நிச்சயம்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

India Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment