scorecardresearch

அண்ணாமலைக்கு டெல்லியில் கிடைத்த முக்கியத்துவம்!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரிவு உபச்சார விழாவில், தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டிருப்பது, கட்சியில் அவரது முக்கியத்துவத்தை காட்டியுள்ளது.

அண்ணாமலைக்கு டெல்லியில் கிடைத்த முக்கியத்துவம்!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரிவு உபச்சார விழாவில், தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டிருப்பது, கட்சியில் அவரது முக்கியத்துவத்தை காட்டியுள்ளது.

இந்திய நாட்டின் 15வது ஜனாதிபதியாக திரெளபதி முர்மு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு இதுவரை குடியரசுத் தலைவராக செயல்பட்ட ராம்நாத் கோவிந்த் தனது பதவி காலத்தை நிறைவு செய்கிறார். இந்நிலையில் அவரின் பிரிவு உபச்சார விழாவில் , பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு, மக்களவை சபாநயகர் ஓம் பிர்லா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்த நிகழ்வில் பல முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர். கூடுதலாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பாஜகவின் எந்த மாநிலத் தலைவருக்கு கிடைக்காத தனி மரியாதை  அண்ணாமலைக்கு கிடைத்திருக்கிறது. இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை தமிழ்நாடு பாஜக சார்பில் சந்திப்பது எனக்கு கிடைத்த மரியாதை. நாட்டுக்காக அவர் ஆற்றிய பணிக்கு நன்றி கூறிவிட்டு அவரை வாழ்த்தினேன். பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்தித்தேன். தமிழ்நாடு மக்கள் மீதான பிரதமரின் அக்கறைக்கும் அன்பிற்கும் நன்றி ” என்று குறிப்பிட்டுள்ளார்.  

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: K annamalai lone bjp state chief to attend ram nath kovinds farewell dinner