scorecardresearch

ரூ.200 கோடி லஞ்சம்; ஸ்டாலின் மீது புகார் கொடுப்பேன்: அண்ணாமலை பேட்டி

முதல்வரின் குடும்பத்தினர் வைத்துள்ள சொத்துக்களின் விவரங்கள் இந்த வீடியோவில் உள்ளது. திமுகவில் புதிதாக இணைந்தவர்கள், பினாமிகள் வைத்திருக்கும் சொத்து விவரங்கள் பார்ட்-2 வீடியோவில் விரைவில் வெளியாகும். இது பார்ட் -1 வீடியோ மட்டுமே என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை

முதல்வரின் குடும்பத்தினர் வைத்துள்ள சொத்துக்களின் விவரங்கள்  இந்த வீடியோவில் உள்ளது. திமுகவில் புதிதாக இணைந்தவர்கள், பினாமிகள் வைத்திருக்கும் சொத்து விவரங்கள் பார்ட்-2 வீடியோவில் விரைவில் வெளியாகும். இது பார்ட் -1 வீடியோ மட்டுமே என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  

திமுக தலைவர்களின் ஊழல் மற்றும் சொத்து விவரங்களை இன்று காலை 10.30 மணிக்கு வெளியிட்டார் அண்ணாமலை. இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது : ”நான் பயன்படுத்தும், கார், அலுவலக ஊழியர்கள் மற்றும் எனது வீட்டு வாடகை ஆகியவற்றை நண்பர்கள்தான் கொடுக்கின்றனர். நான் கையில் கட்டியிருக்கும் ரபேல் வாட்ச் வைத்து திமுகவினர் பல வதந்திகளை பரப்பினர். நண்பரிடம் ரபேல் வாட்சை ரூ. 3 லட்சம் கொடுத்து வாங்கினேன். அதற்கான பில்லை இப்போது உங்களுக்கு காட்டுகிறேன். கேரளாவில் உள்ள எனது நண்பர் சேரலாதன் ராமகிருஷ்ணன்தான் எனக்கு இந்த வாட்சை கொடுத்தார்.  கோவை ஜிம்சன் நிறுவனத்தில்தான் அவர் இந்த வாட்சை வாங்கி உள்ளார். 2021-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த வாட்சை வாங்கிய அவர் என்னிடம் மே மாதம் அதை கொடுத்தார். மேலும் சேரலாதன் ராமகிருஷ்ணனை எனக்கு 2 ஆண்டுகளாக நன்றாகத் தெரியும். இந்நிலையில் நான் இப்போது வெளியிடும் திமுக தலைவர்கள் தொடர்பான ஊழல் பட்டியலை பத்திரிக்கை நண்பர்கள் ஒரு வாரம் நான்றாக ஆராய வேண்டும். அதன் பின்பு ஒரு செய்தியாளர் சந்திப்பு வைத்துக்கொள்ளலாம்.

என்னை எப்போதும் கேள்வி கேட்கும் பத்திரிக்கையாளர்களிடம் இன்று நான் கேள்வி கேட்ட உள்ளேன். நீங்கள் பொருமையாக கேட்க வேண்டும். முதல் தலைமுறை அரசியல்வாதி என்பதால் மாதத்திற்கு 7- 8 லட்சம் வரை செலவு செய்ய வேண்டி உள்ளது. இந்த வீடியோவில் முதல்வர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்து பட்டியலை  வெளியிட்டுள்ளோம். திமுகவில் புதிதாக சேர்ந்திருப்போரின் கருப்பு பணம் மற்றும் அவர்களது பினாமிகள் வைத்திருக்கும் 20 ஆயிரம் கோடி சொத்துக்களை பார்ட் -2 வீடியோவில் வெளியிட உள்ளேம். தமிழ்நாட்டுக்கு என்ன வேண்டுமோ அதை மோடியிடம் பேசி கொண்டு வரும் சாமர்த்தியம் எல். முருகனுக்கு இருக்கிறது. இந்த ஊழல் தொடர்பாக  சிபிஐயிடம் நான் புகார் அளிக்க உள்ளேன். ” என்று அவர் கூறினார்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: K annamalai press meet on charges mk stalin family cbi investigation