/tamil-ie/media/media_files/uploads/2019/02/a478.jpg)
தமிழக காங்கிரஸ் தலைவராக கே எஸ் அழகிரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைமை இன்று (ஜன.2) அதிகாரப்பூர்வமாக இதனை அறிவித்துள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வந்த திருநாவுக்கரசர் மாற்றப்படலாம் என்று கடந்த சில மாதங்களாகவே பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் காங்கிரஸ் தலைவராக கே.எஸ். அழகிரி நியமனம் செய்யப்பட்டுள்ளார் என காங்கிரஸ் தலைமை இன்று அறிவித்துள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக திரு கே.எஸ் அழகிரி அவர்களை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு @RahulGandhi அவர்கள் நியமித்தார். உடன் புதிய செயல் தலைவர்களாக திரு @vasanthakumarH , திரு கே.ஜெயக்குமார், டாக்டர் விஷ்ணு பிரசாத், திரு @MayuraSJ ஆகியோர் நியமனம். pic.twitter.com/UTMDzTmzBR
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) 2 February 2019
மேலும், செயல் தலைவர்களாக வசந்த்குமார், ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர் என் காங்கிரஸ் கட்சித் தலைமை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, பேட்டியளித்த கே.எஸ்.அழகிரி, "தமிழகம், புதுச்சேரியில் வரும் லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற கட்சிகள் வெற்றி பெற பாடுபடுவேன். கட்சியில் இளைஞர்களைச் சேர்க்க செயல் தலைவர்களுடன் சேர்ந்து பாடுபடுவேன். திருநாவுக்கரசுக்கான இடம் எப்போதும் காங்கிரஸ் கட்சியில் இருக்கும்" என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us