தமிழக காங்கிரஸ் தலைவராக கே எஸ் அழகிரி நியமனம்!

செயல் தலைவர்களாக வசந்த்குமார், ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார் நியமனம்

தமிழக காங்கிரஸ் தலைவராக கே எஸ் அழகிரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைமை இன்று (ஜன.2) அதிகாரப்பூர்வமாக இதனை அறிவித்துள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வந்த திருநாவுக்கரசர் மாற்றப்படலாம் என்று கடந்த சில மாதங்களாகவே பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் காங்கிரஸ் தலைவராக கே.எஸ். அழகிரி நியமனம் செய்யப்பட்டுள்ளார் என காங்கிரஸ் தலைமை இன்று அறிவித்துள்ளது.

மேலும், செயல் தலைவர்களாக வசந்த்குமார், ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர் என் காங்கிரஸ் கட்சித் தலைமை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, பேட்டியளித்த கே.எஸ்.அழகிரி, “தமிழகம், புதுச்சேரியில் வரும் லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற கட்சிகள் வெற்றி பெற பாடுபடுவேன். கட்சியில் இளைஞர்களைச் சேர்க்க செயல் தலைவர்களுடன் சேர்ந்து பாடுபடுவேன். திருநாவுக்கரசுக்கான இடம் எப்போதும் காங்கிரஸ் கட்சியில் இருக்கும்” என்றார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: K s alagiri appointed as tamil nadu congress chief

Next Story
Chennai Metro Rail: வாங்க… மொபைல் ஸ்கேன் பண்ணுங்க… போய்கிட்டே இருங்க..Chennai Metro Rail Limited, CMRL, சென்னை மெட்ரோ
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com