/tamil-ie/media/media_files/uploads/2020/10/Subramaniyam-resized.jpg)
K S Subramanian former director of Asian Development Bank Death
Writer and NAF Founder Trustee K.S. Subramanian Tamil News: ஆசிய வளர்ச்சி வங்கியின் முன்னாள் இயக்குநரும், தேசிய வேளாண் அறக்கட்டளையின் (National Agro Foundation (NAF)) நிறுவனருமான கே.எஸ். சுப்பிரமணியன், அக்டோபர் 24-ம் தேதி இரவு தன் ஆர்.ஏ. புறம் வீட்டில் மரணமடைந்தார். 83 வயதாகிய இவர், உடல்நலக்குறைவால் காலமானார்.
1937-ம் ஆண்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த இவர், ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லத்தில் படித்தார். இதனைத் தொடர்ந்து மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் வரலாற்றில் முதுகலை படிப்பையும் முடித்தார். அட்டெனியோ டி மணிலா (Ateneo de Manila) பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலை மற்றும் ஃபிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.
இலக்கியங்களில் அதிக ஆர்வம் கொண்ட இவர், நாவல், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகளின் தொகுப்பு என சுமார் 40 தமிழ்ப் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அதுமட்டுமின்றி, இலக்கிய, சமூக மற்றும் வளர்ச்சி கருப்பொருள்கள் குறித்த அவரது தமிழ் கட்டுரைகள் ஏழு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன.
இந்திய ரயில்வேயில் துணை நிதி ஆலோசகர் மற்றும் தலைமை கணக்கு அலுவலர் என்ற முறையில், திட்டக் கணக்கெடுப்பு மற்றும் திட்ட வடிவமைப்பிலும் ஈடுபட்டுள்ளார். ஆசிய வளர்ச்சி வங்கியில் பணிபுரிந்தபோது, ஆசியா மற்றும் தென் பசிபிக் நாடுகளின் நகர்ப்புற வளர்ச்சி, போக்குவரத்து உள்கட்டமைப்பு, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளின் நலப்பணி உள்ளிட்ட பல வளர்ச்சிக்குக் காரணமாக இருந்திருக்கிறார்.
முன்னதாக, பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திராவின் செயற்குழு உறுப்பினராக இருந்தார். சாகித்ய அகாடமியின் தமிழ் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் அவர் ஆறு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். ஓர் எழுத்தாளராக இலக்கிய வட்டாரங்களில் நன்கு அறியப்பட்ட இவருடைய மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.