பாரதிய ஜனதா கட்சியின் மாநில மகளிர் அணியின் பொருளாளர் மாலினி ஜெயச்சந்திரன் மற்றும் பாஸ்கர் ஆகியோர் லஞ்சப் பணம், ஊழல் பணம், கறுப்பு பணம், பினாமி பணம் வாயிலாக ரூ.600 கோடிக்கும் மேல் சொத்துக்களை சேர்த்து வைத்துள்ளனர்.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பார்த்தால் இந்த விஷயத்தில் அவர்களுக்கு பக்க பலமாக அண்ணாமலை இருக்கிறார்.
இந்தப் பணத்தில் வரும் பங்கு அவருக்கு செல்கிறது. எனவே இந்த விவகாரத்தில் மூன்றாவது முறையாக புகார் அளிக்க உள்ளோம். இந்த விவகாரத்தில் அண்ணாமலை மீதும் வரும் வியாழக்கிழமை (அக்.26) புகார் அளிக்க உள்ளோம்.
இதில் ஏன் அண்ணாமலை பெயரையும் சேர்க்கிறோம் என்றால் பெங்களூரு-சென்னை சாலையில் ரூ.1000 கோடிக்கும் மேல் விஞ்ஞான ஊழல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இந்தத் திட்டத்தை முறியடிப்பதற்காக ஆவணங்களை திரட்டி புகார் கொடுக்க உள்ளோம். அந்த வகையில், மாலினி ஜெயச்சந்திரன், பாஸ்கர் மற்றும் அண்ணாமலை ஆகியோரை சட்டத்தின் முன் நிறுத்துவோம்” என்றார்.
தமிழர் முன்னேற்ற படை என்ற அமைப்பை நடத்திவரும் கி. வீரலட்சுமி கடந்த மாதம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, நடிகை விஜயலட்சுமி உடன் இணைந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
இந்த நிலையில் நடிகை விஜயலட்சுமி, கி வீரலட்சுமியிடம் இருந்து பிரிந்தார். இதனால் இந்த விவகாரம் கி வீரலட்சுமி, சீமான் என மாறியது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“