Advertisment

90-ஐ தொடும் கி.வீரமணி: 'அறிவியல் சிந்தனையை இந்து எதிர்ப்பாக குழப்ப வேண்டாம்'

திராவிடர் கழகத்தின் தலைவரும், பெரியார், தி.மு.க-வைத் தொடங்கிய அண்ணாவின் தோழருமான கி.வீரமணி, தமிழகத்தில் திராவிட சித்தாந்தம் குறித்த கருத்தியல் விவாதம் மற்றும் அரசியல் மோதலின் மையமாக இருக்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
DMK, Dravidar Kazhagam, AIADMK, Indian Express, K Veeramani, Periyar, கி வீரமணி, திராவிடர் கழகம், பெரியார், திமுக, அண்ணா, கருணாநிதி, தமிழ்நாடு அரசியல், Karunanidhi, Justice Party, Annadurai, Dravidian politics

திராவிடர் கழகத்தின் தலைவரும், பெரியார், தி.மு.க-வைத் தொடங்கிய அண்ணாவின் தோழருமான கி.வீரமணி, தமிழகத்தில் திராவிட சித்தாந்தம் குறித்த கருத்தியல் விவாதம் மற்றும் அரசியல் மோதலின் மையமாக இருக்கிறார்.

Advertisment

கி. வீரமணியின் வாழ்க்கை தமிழ்நாட்டு அரசியலுக்கு இணையாக சென்று கொண்டிருக்கிறது. திராவிட இயக்கங்களின் தாய்க்கழகமான திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வெள்ளிக்கிழமை 90 வயதை நிறைவு செய்கிறார்.

தமிழகத்தில் ஆளும் தி.மு.க.'திராவிட சித்தாந்தம் தொடர்பாக பா.ஜ.க உடன் சித்தாந்த ரீதியாக விவாதத்திலும் அரசியல் ரீதியான மோதலிலும் ஈடுபட்டுள்ள நிலையில், சமூக சீர்திருத்தவாதி பெரியாரால் நிறுவப்பட்ட திராவிடர் கழகம் அதன் போக்கில் சிலவற்றை உத்தரவிடுகிறது.

பெரியார், தி.மு.க-வை நிறுவிய சி.என். அண்ணாதுரை மற்றும் தி.மு.க தலைவர் மு. கருணாநிதி ஆகியோருடன் அரசியல் பணியாற்றிய கி. வீரமணி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசும்போது, திராவிட அரசியலாலும் அதன் அறிவியல் மனப்பான்மையின் அழுத்தத்தாலும் தமிழ்நாடு செழித்திருக்கிறது என்று கூறினார்.

“சமூக நீதி, சமத்துவம், தொழில்மயமாக்கல், உற்பத்தி, சுகாதாரம், கல்வி போன்றவற்றில் தமிழகத்தை சிறந்த மாநிலமாக மாற்றியது எது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அறிவியல் சிந்தனையில் நாம் பின்பற்றும் திராவிட அரசியலால்தான் அதெல்லாம் சாத்தியமானது.” என்று கி. வீரமணி கூறினார்.

அறியவியல் சிந்தனையை மதத்திற்கோ அல்லது இந்து மதத்திற்கோ எதிரானது என்று குழப்பிக் கொள்ள வேண்டியதில்லை. இந்து மதத்திற்கு எதிரானாது என்று தி.மு.க மீது அதன் எதிரிகளால் அடிக்கடி குற்றச்சாட்டு சுமத்தப்படுமிறது என்று கூறிய வீரமணி, “நாங்கள் எங்களுடைய மக்களுக்கு எதிரானவர்கள் என்று எங்களுடைய எதிரிகள்தான் கூறுவார்கள். பிராமணர்களுக்கு எதிராக எங்களிடம் எதுவும் இல்லை. ஆனால், பிராமணியம் மற்றும் பிராமண சக்திகளுக்கு எதிராக எங்களிடம் ஏதோ இருக்கிறது. நமது பிராமண எதிர்ப்பு என்பது மனிதாபிமானமாக இருப்பதுதான். ‘பிராமண ஆதிக்கம்’ என்ற வார்த்தையை பெரியார் கொண்டு வந்தார். அதுதான் இன்றும் நாட்டை நடத்தும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அதிகாரிகளின் ஜாதியைப் பார்த்தால் உண்மையாக இருக்கிறது” என்று வீரமணி கூறினார்.

சில எதிர்ப்பாளர்கள், திராவிடர் கழகம், தி.மு.க.வின் சித்தாந்தத்தை நிர்ணயிக்கிறது என்றும், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான செல்வாக்கைக் கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

“ஆர்எஸ்எஸ் ஒரு பாசிச தத்துவம் கொண்ட ஒரு ரகசியக் குழு. அதே நேரத்தில் நாங்கள் எல்லாவற்றையும் வெளிப்படையாகக் கூறுகிறோம். எங்களுக்கு வன்முறையில் நம்பிக்கை இல்லை. பெரியார் உயிருடன் இருந்தபோது, ​​எந்தப் போராட்டமோ, பொது நிகழ்ச்சியோ நடந்தால், காவல்துறையிடம் சென்று நேரத்தையும் இடத்தையும் சொல்லச் சொல்வார். நாங்கள் அதிகபட்சம் ஒரு அழுத்தக் குழுவாக இருக்கிறோம். ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க-வுக்கு பொறுப்பாளராக இருக்கிறது. ​​நாங்கள் தி.மு.க-வுக்கு எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை. திராவிடர் கழகத்துகும் மற்றும் ஆர்.எஸ்.எஸ்.க்கும் பொதுவான ஒரே விஷயம், இரண்டு இயக்கங்களும் தேர்தலில் போட்டியிடுவதில்லை.” என்று கி.வீரமணி ஆர்.எஸ்.எஸ். குறித்து வாதங்களை வைத்தார்.

மேலும், “பிராமணியம் மீதான எங்களுடைய விமர்சனம் வெறுப்பின் அடிப்படையிலானது இல்லை. ஆர்.எஸ்.எஸ் முஸ்லிம்களுக்குச் செய்வதைப்போல நாங்கள் பிராமணர்களுக்குச் செய்வதில்லை.” என்று கி.வீரமணி கூறினார்.

கி. வீரமணி பெரியாருடன் இணைந்து செயல்பட்டவர். அதன் விளைவாக, அவர் சிறுவனாக இருந்தபோது ​​பின்னர் சாரங்கபாணி என்று பெயரிட்டார். சிறுவன் சாரங்கபாணியை முதன்முதலில் பெரியாருக்கு அறிமுகப்படுத்தியவர் அவருடைய பால்ய நண்பரும், புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளருமான ஜெயகாந்தன் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் சுப்ரமணியன். சுப்பிரமணியன் தனது மாணவர்களிடம் பெரியாரைப் பற்றியும், அப்போது பிரபலமடைந்து வந்த அவரது சிந்தனைகளைப் பற்றியும் கூறினார். திராவிட சிந்தனையைப் பரப்புவதில் முக்கியப் பங்காற்றிய பேச்சுப் போட்டியில் அவர்களை பயிற்றுவித்தார்.

கி.வீரமணி 10 வயதாக இருக்கும் போது, ​​1944 ஆம் ஆண்டு நடைபெற்ற திராவிடர் கழகத்தின் கடலூர் மாநாட்டில் பேச சாரங்கபாணி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய பேச்சில் பார்வையாளர்களாக இருந்த பெரியாரும் அண்ணாவும் ஈர்க்கப்பட்டனர். அந்த மாநாட்டில் எனக்குப் பிறகு பேசிய அண்ணாதுரை, ‘இந்தக் குழந்தை பகுத்தறிவுப் பாலைக் குடிக்கிறது, பார்வதியின் பால் அல்ல’ என்று கூறியதை கி. வீரமணி நினைவு கூர்ந்தார்.

விரைவில், சாரங்கபாணி திராவிடக் கழகத்தின் மிகவும் பிரபலமான பேச்சாளர்களில் ஒருவராக ஆனார். திராவிடர் கழகத்தின் எண்ணங்களையும் செய்திகளையும் பிரச்சாரம் செய்ய அனுப்பப்பட்டார். “பொதுக் கூட்டங்களின் சுவரொட்டிகளும் நோட்டீஸ்களும் என்னை ‘கடலூர் மாநாட்டில் பேசிய குழந்தை’ என்று குறிப்பிடுகின்றன” என்று வீரமணி சிரித்துக்கொண்டே கூறுகிறார். அத்தகைய போஸ்டர்கலை பிரேம் செய்து இன்னும் பாதுகாத்து வைத்திருபதைக் காட்டினார்.

அவர் தனது ஆசிரியர் உட்பட மற்ற திராவிடத் தலைவர்களைப் போலவே இந்து மதத்தின் அடையாளங்களிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ள 'வீரமணி' என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். 1943 வாக்கில் பெரியாரின் நீதிக்கட்சியும் திராவிடர் கழகம் என்ற பெயரைப் பெற்றது.

வீரமணி தி.க.வின் திராவிட மாணவர் கூட்டமைப்புக்கு தலைமை தாங்கினார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற பிறகு, சிறிது ஆசிரியராக இருந்தார். பின்னர், சட்டப் படிப்புக்காக சென்னைக்குச் சென்றார்.

1949-ல் அண்ணா தி.க-வில் இருந்து விலகி தி.மு.க-வை நிறுவினார். பல தலைவர்கல் அண்ணாவின் வாதங்களால் ஈர்க்கப்பட்டார்கள் என்றும், ஆனால், கி.வீரமணி போன்ற சிறிய அளவில்தான் தி.க-வுக்கு ஆதரவாக நின்றார்கள் என்றும் வீரமணி கூறுகிறார். தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பழக்கவழக்கங்கள் தொடர்பாக பெரியாரின் கடுமையான விதிமுறைகளைப் பற்றி கி. வீரமணி, “அது எப்போதும் எளிதானது அல்ல.” என்று கூறுகிறார்.

திராவிட இயக்கப் போராட்டத்தில் தனது நீண்ட காலப் போராட்டத்தின் சவால்களைப் பற்றி, 1972-ல் தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில், அவர்களுக்கு அச்சு இயந்திரம் நிறுவ வந்த ஒரு ஜெர்மன் தூதுக்குழுவை கி. வீரமணி உதாரணம் காட்டுகிறார். “நல்ல நேரம்: 24 மணிநேரம்” என்று எழுதப்பட்ட ஒரு பத்தியுடன் கூடிய திராவிடர் கழகத்தின் காலண்டரை வீரமணி காட்டுகிறார். அப்போது அவர்கள் ஜெர்மன் தூதுக்குழுவிடமும் அதையே கூறினார்கள்.

உலகம் பெரிய அளவில் துருவமயமாகி வரும் நிலையில், பெரியாரின் நெகிழ்சியான செய்தியை வீரமணி குறிப்பிடுகிறார். பெரியார் திணிக்க வேண்டாம் என்று நினைவூட்டுகிறார்.

இன்னும் கணிசமான அளவில், கி. வீரமணி திராவிடர் கழகத்தின் பங்களிப்புகளை தேசத்தை கட்டியெழுப்ப உதவுவதாக பட்டியலிடுகிறார். மாநில அரசுகள் ஒடுக்கப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டுக் கொள்கைகளை உருவாக்க அனுமதிக்கும் சட்டத்தில் மாற்றங்களை உறுதிப்படுத்துகிறது.

90 வயதாகும் கி. வீரமணி, பெரியாரின் பொருள் மற்றும் அறிவுசார் மரபு இரண்டையும் ஏகபோக உரிமையாக்கிக்கொண்டார் என்ற குற்றச்சாட்டுகள், பிற தமிழகத் தலைவர்களைப் போலவே கல்வி நிறுவனங்களை நடத்தினார் என்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் அவர் சர்ச்சையில் சிக்கி இருகிறார். இருப்பினும், தமிழக அரசியலில் மூத்த தலைவர். அவருடைய சமகாலத்தவர்கள் “அவர் எதற்காகவும் வருத்தப்படவில்லை” என்று கூறுகிறார்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

K Veeramani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment