KA Sengottaiyan Press Meet Updates: ஒற்றுமை வேடம் போடும் நரிகள் வேண்டாம்! இ.பி.எஸ் பரப்புரையில் இடம்பெற்ற ஆதரவு பதாகை!

அ.தி.மு.க தலைமை மீது அதிருப்தியில் இருந்த மூத்த தலைவர் செங்கோட்டையன், பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க எடப்பாடி பழனிச்சாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்துள்ளார்.

அ.தி.மு.க தலைமை மீது அதிருப்தியில் இருந்த மூத்த தலைவர் செங்கோட்டையன், பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க எடப்பாடி பழனிச்சாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
banner admk

KA Sengottaiyan Press Meet Today Updates: அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையின் மீது அதிருப்தியில் இருக்கும் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க மூத்த தலைவருமான கே.ஏ.செங்கோட்டையன், கடந்த சில மாதங்களாகவே, கட்சியில், புறக்கணிக்கப்படுவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Advertisment

இதனிடையே இன்று காலை 9 மணிக்கு கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன்,  , "அ.தி.மு.க-விலிருந்து வெளியேறியவர்களை 10 நாட்களுக்குள் ஒருங்கிணைக்க வேண்டும். எங்களது கோரிக்கையை மறுத்தால் என்னைப்போல் மனநிலை உள்ளவர்கள் ஒன்றிணைவோம்" என்று கூறி ஓ.பி.எஸ், டி.டி.வி, சசிகலாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

மேலும், ஏழை, எளிய மக்களுக்கான இயக்கம் அ.தி.மு.க, இயக்கத்திற்கு பல்வேறு தடுமாற்றம் வரும் போது நான் செய்த பணிகள் பற்றி பாராட்டினார் ஜெயலலிதா. அ.தி.மு.க தொண்டர்கள் மகிழ்ச்சியாக இருக்க எந்த தியாகமும் செய்ய தயாராக இருந்தேன், இரண்டு வாய்ப்புகள் வந்த போதும் அதை தியாகம் செய்தேன்" என்று செங்கோட்டையன் தெரிவித்தார். 

  • Sep 05, 2025 21:52 IST

    ஒற்றுமை வேடம் போடும் நரிகள் வேண்டாம்! இ.பி.எஸ் பரப்புரையில் இடம்பெற்ற ஆதரவு பதாகை! 

    அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேனியில் பரப்புரையில் ஈடுபட்டபோது, “நரிகளுக்கு என்ன வந்தது கேடு, உக்களுக்கு யார் விதிக்க முடியும் கெடு. அ.தி.மு.க-வில் அனைவரும் உங்களோடு. நீக்கள் மட்டும் போதும் தலைவா... நாங்க இருக்கோம்” என்ற பதாகை இடம்பெற்றிருந்தது.

    அதே போல, “ஒற்றுமை வேடம் போடும் நரிகள் வேண்டாம்! கழகத்திற்காக உயிர் வருத்தி உழைக்கும் நீங்கள் மட்டும் போதும்!” என்ற பதாகையும் இடம்பெற்றுள்ளது.



  • Sep 05, 2025 19:24 IST

    செங்கோட்டையன் பேச்சு… உட்கட்சி விவகாரம் - தமிழிசை

    செங்கோட்டையன் பேச்சு உட்கட்சி விவகாரமாகத்தான் பார்க்கிறோம். அ.தி.மு.க மூத்த தலைவர், அக்கட்சியின் தலைமைக்கு ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார். எந்த குறையும் சொல்லாத அளவிற்கு எங்கள் கூட்டணி இருக்கு என பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.



  • Advertisment
    Advertisements
  • Sep 05, 2025 19:21 IST

    செங்கோட்டையன் கருத்து – துரை வைகோ கூறியது என்ன?

    அ.தி.மு.க மூத்த நிர்வாகி செங்கோட்டையனின் கருத்து அவரது இயக்கத்தைச் சார்ந்தது. அதில் நான் கருத்து கூறுவது ஆரோக்கியமாக இருக்காது. தேசிய ஜனநாயக கூட்டணி, ஒற்றுமையில்லாத, தொலைநோக்கு சிந்தனை இல்லாத கூட்டணியாக உள்ளது என ம.தி.மு.க எம்.பி துரை வைகோ தெரிவித்துள்ளார்.



  • Sep 05, 2025 19:14 IST

    செங்கோட்டையன் கருத்து – ஜி.கே வாசன் கூறியது இதுதான்

    செங்கோட்டையன் கருத்து குறித்த கேள்விக்கு, அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் நம்பிக்கையுடன் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுத்து, அ.தி.மு.க, பா.ஜ.க தலைவர்கள் செயல்பட்டு வருகின்றனர். தி.மு.க வேண்டாம் என நினைப்பவர்கள் ஓரணியில் திரள்வார்கள் என தா.ம.க தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.



  • Sep 05, 2025 18:22 IST

    இ.பி.எஸ் வாகனத்தை முற்றுகையிட்டு அ.தி.மு.க.,வினர் கோஷம்

    தேனி மாவட்டத்தில் பரப்புரையில் ஈடுபட்டுள்ள எடப்பாடி பழனிசாமி சென்ற வாகனத்தை முற்றுகையிட்டு அ.தி.மு.க.,வினர் கோஷமிட்டனர். செங்கோட்டையன் கருத்துக்களைத் தொடர்ந்து அ.தி.மு.க ஒன்றிணைய வேண்டும் என அ.தி.மு.க.,வினர் கோஷம் எழுப்பினர்



  • Sep 05, 2025 16:44 IST

    எல்லோரும் ஒன்றாக வேண்டுமென சொல்வது நல்ல விஷயம்தான் - நயினார் நாகேந்திரன்

    செங்கோட்டையன் கருத்து குறித்த கேள்விக்கு, எல்லோரும் ஒன்றாக சேர வேண்டுமென சொல்வது நல்ல விஷயம்தான் என தமிழக பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்



  • Sep 05, 2025 16:20 IST

    ஒற்றுமையாக இருந்தால் தான் பலன் கிடைக்கும்- எச்.ராஜா

    செங்கோட்டையன் அதிமுகவில் தான் இருக்கிறார். அவருடைய உணர்வு எனக்கு புரிகிறது. ஒற்றுமையாக இருந்தால் தான் பலன் கிடைக்கும்

    - திருச்சியில் ஹெச்.ராஜா பேட்டி



  • Sep 05, 2025 16:16 IST

    செங்கோட்டையனின் முயற்சிக்கு ஆதரவு அதிகம்: வைத்திலிங்கம்

    பிரிந்தவர்களை ஒருங்கிணைக்கும் செங்கோட்டையனின் முயற்சிக்கு ஆதரவு அதிகம்

    -தஞ்சையில் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பேட்டி



  • Sep 05, 2025 15:27 IST

    இ.பி.எஸ்.க்கு எதிராக தென்மாவட்டங்களில் போஸ்டர்கள்

    எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தென்மாவட்டங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. முன்னதாக இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், அ.தி.மு.க. (ADMK) மீண்டும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும், கட்சியை விட்டு விலகியவர்கள் மீண்டும் சேர்க்கப்பட வேண்டும், இது குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பத்து நாள் காலக்கெடு விதித்திருந்தார்.



  • Sep 05, 2025 15:00 IST

    வி.கே. சசிகலா அறிக்கை

    எனது உடலில் ஓடுவது அதிமுக ரத்தம் தான் என்பதை செங்கோட்டையன் நிரூபித்துள்ளார்; அதிமுக ஒன்றுபட வேண்டும் என்ற அவரின் கருத்தை நானும் வலியுறுத்துகிறேன்

     - வி.கே. சசிகலா அறிக்கை.



  • Sep 05, 2025 14:47 IST

    செங்கோட்டையனை சந்திக்க பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வருகை

    சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அ.தி.மு.க. மீண்டும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். கட்சியை விட்டு விலகியவர்கள் மீண்டும் சேர்க்கப்பட வேண்டும், இது குறித்து எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் பத்து நாள் காலக்கெடு விதித்திருந்தார்.

    இதைத்தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையனின் முயற்சிக்குத் தனது ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்திருந்தார். தற்போது, திருப்பூரைச் சேர்ந்த ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் வாழ்த்துக் கூறும் நோக்கத்தில் செங்கோட்டையனைச் சந்திக்க வருகை தந்துள்ளனர். 



  • Sep 05, 2025 14:26 IST

    மதுரை விமான நிலையத்தில் தொல். திருமாவளவன் பேட்டி

    செங்கோட்டையன் இன்று மனம் திறந்து பேச போவதாக சொன்னார். ஆனால் அவர் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை என்று அவரின் பேட்டியில் தெரிய வருகிறது. அவர் இன்னும் வெளிப்படையாக சொல்லலாம்.

    மதுரை விமான நிலையத்தில் தொல். திருமாவளவன் பேட்டி    



  • Sep 05, 2025 13:55 IST

    செங்கோட்டையன் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளவே பேசியுள்ளார்: கே.பாலகிருஷ்ணன்

    அ.தி.மு.க உடைந்துபோன கண்ணாடி, அதை ஒட்டவைக்க முடியாது. செங்கோட்டையன் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளவே இன்று பேசியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி நீடிக்கும்வரை அ.தி.மு.க ஒன்றிணைய வாய்ப்பில்லை என்று கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். 



  • Sep 05, 2025 13:52 IST

    செங்கோட்டையன் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை: திருமாவளவன்

    இது அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரம். செங்கோட்டையன் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை என்று அவர் பேட்டியில் தெரிகிறது என்று வி.சி.க தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். 



  • Sep 05, 2025 13:44 IST

    பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எடுப்பதே எங்கள் முடிவு: திண்டுக்கல் சீனிவாசன்

    செங்ககோட்டையன், எடப்பாடி பழனிச்சாமிக்கு, 10 நாட்கள் கெடு வைத்துள்ளது குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் தனது முடிவை கூறியுள்ளார். ஆனால், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எடுப்பதே எங்கள் முடிவு என்று கூறியுள்ளார்.



  • Sep 05, 2025 13:04 IST

    செங்கோட்டையன் "தொண்டர்களின் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார்: வைத்திலிங்கம்

    தொண்டர்களின் எண்ணத்தை செங்கோட்டையன் வெளிப்படுத்தி உள்ளார். செங்கோட்டையனின் 10 நாள் கெடு என்பது இணைப்பதற்கான முயற்சி. ஒருங்கிணைப்புக்கு தடையாக உள்ளவர்கள் மீது மக்கள் கோபமாக உள்ளனர் என ஒ.பி.எஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.



  • Sep 05, 2025 12:28 IST

    தன் உடலில் ஓடுவது அ.தி.மு.க ரத்தம் என்பதை செங்கோட்டையன் நிரூபித்துள்ளார்: வி.கே.சசிகலா

    தன் உடலில் ஓடுவது அ.தி.மு.க ரத்தம் என்பதை செங்கோட்டையன் நிரூபித்துள்ளார். ஒன்றுபட வேண்டும் என்ற அவரின் கருத்தே ஒவ்வொரு தொண்டர்களின் கருத்து. ஒன்றுபடுவோம் வென்றுகாட்டுவோம் என வி.கே.சசிகலா கூறியுள்ளார்.



  • Sep 05, 2025 11:53 IST

    செங்கோட்டையனுக்கு பக்கபலமாக இருப்போம்: ஓபிஎஸ் கருத்து

    அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க யார் முயற்சி செய்தாலும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பேன். செங்கோட்டையனின் எண்ணம் வெற்றி பெற வாழ்த்துகள், மனசாட்சியுடன் பேசிய செங்கோட்டையனுக்கு பக்கபலமாக இருப்போம் என செங்கோட்டையன் பேச்சுக்கு ஓபிஎஸ் கருத்து தெரிவித்துள்ளார்.



  • Sep 05, 2025 11:37 IST

    செங்கோட்டையனின் முயற்சி நல்ல முயற்சி: நயினார் நாகேந்திரன்

    அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க செங்கோட்டையனின் முயற்சி நல்ல முயற்சி. அனைவரும் ஓரணியில் இணைவது நிச்சயம் நடக்கும். கடைசி ஒரு மாதத்தில் கூட நடக்கும் என்று பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.



  • Sep 05, 2025 11:30 IST

    என் மனதில் உள்ள பாரமே குறைந்துவிட்டது: ஒ.பன்னீர்செல்வம்

    அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை 10 நாட்களுக்குள் கட்சியில் இணைக்க வேண்டும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கெடு வைத்துள்ள நிலையில், என் மனதின் குரலாக செங்ககோட்டையன் பேசியுள்ளார். என் மனதில் உள்ள பாரமே குறைந்துவிட்டது. அ.தி.மு.க பிரிந்திருந்தால் வெற்றி பெற முடியாது என்று முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.



  • Sep 05, 2025 11:26 IST

    புரட்சி தலைவர் நல்லாட்சி மலர ஒன்றிணைத்து செயல்பட வேண்டும்: செங்கோட்டையன்

    கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், வெளியே சென்றவர்களை அரவணைக்க, வேண்டும், புரட்சி தலைவர் நல்லாட்சி மலர ஒன்றிணைத்து செயல்பட வேண்டும். வெளியே சென்றவர்கள் எந்த நிர்ப்பந்தமும் இல்லாமல் கட்சியில் இணைவதாக சொல்கிறார்கள் என பேட்டியில் கூறியுள்ளார்.



  • Sep 05, 2025 11:01 IST

    கட்சியை ஒருங்கிணைக்க இ.பி.எஸ்-க்கு கெடு

    கோபிச்செட்டிபாளையத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுடன் சந்திப்பு மேற்கொண்டார். அப்போது, "அ.தி.மு.க-விலிருந்து வெளியேறியவர்களை 10 நாட்களுக்குள் ஒருங்கிணைக்க வேண்டும். எங்களது கோரிக்கையை மறுத்தால் என்னைப்போல் மனநிலை உள்ளவர்கள் ஒன்றிணைவோம்" என்று கூறி ஓ.பி.எஸ், டி.டி.வி, சசிகலாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் செங்கோட்டையன். 



  • Sep 05, 2025 10:55 IST

    "10 நாட்கள் கால அவகாசம் நிர்ணயம்" - செங்கோட்டையன் பேச்சு 

    கோபிச்செட்டிபாளையத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுடன் சந்திப்பு மேற்கொண்டார். அப்போது பேசுகையில், "என்னுடைய கருத்துக்களை பிரதிப்பலித்து காலகெடுகள் நிர்ணயம் செய்து உள்ளேன், அதன் பிறகு என்னை போன்று உள்ளவர்கள் ஒருங்கிணைக்க வேண்டும். கால அவகாசம் என்பது 10 நாட்கள் நிர்ணயம் செய்து உள்ளேன்" என்று செங்கோட்டையன் தெரிவித்தார். 



  • Sep 05, 2025 10:44 IST

    "வாய்ப்பை தியாகம் செய்தேன்" - செங்கோட்டையன்

    கோபிச்செட்டிபாளையத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுடன் சந்திப்பு மேற்கொண்டார். அப்போது பேசுகையில், "ஏழை, எளிய மக்களுக்கான இயக்கம் அ.தி.மு.க, இயக்கத்திற்கு பல்வேறு தடுமாற்றம் வரும் போது நான் செய்த பணிகள் பற்றி பாராட்டினார் ஜெயலலிதா. அ.தி.மு.க தொண்டர்கள் மகிழ்ச்சியாக இருக்க எந்த தியாகமும் செய்ய தயாராக இருந்தேன், இரண்டு வாய்ப்புகள் வந்த போதும் அதை தியாகம் செய்தேன்" என்று செங்கோட்டையன் தெரிவித்தார். 



  • Sep 05, 2025 10:44 IST

    மறப்போம், மன்னிப்போம் - செங்கோட்டையன்

    கோபிச்செட்டிபாளையத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுடன் சந்திப்பு மேற்கொண்டார். அப்போது பேசுகையில், "வெளியே சென்றவர்களை அரவணைக்க வேண்டும், புரட்சி தலைவர் நல்லாட்சி மலர ஒன்றினைத்து செயல்பட வேண்டும். வெளியே சென்றவர்கள் எந்த நிர்ப்பந்தமும். இல்லாமல் கட்சியில் இணைவதாக சொல்கிறார்கள்" என்று செங்கோட்டையன் தெரிவித்தார். 



  • Sep 05, 2025 10:30 IST

    அ.தி.மு.க-வில் இருந்து விலகியவர்களை வீடு சென்று அழைத்தார் எம்.ஜி.ஆர் - செங்கோட்டையன் பேச்சு 

    "எஸ்.டி.சோமசுந்தரம், கோவை செழியன் போன்றோர் அ.தி.மு.க-வில் இருந்து விலகியபோது, அவர்களது இல்லத்திற்கே சென்று தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி நீங்கள் கட்சியிலேயே இருக்க வேண்டும் என அவர்களை அழைத்தார் எம்.ஜி.ஆர்" என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 



  • Sep 05, 2025 10:08 IST

     லாரிகளில் வந்து இறங்கிய பெண்கள் - அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் குவிந்த செங்கோட்டையன் ஆதரவாளர்கள்! 

    அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்னும் சற்று நேரத்தில் செய்தியாளர்களை சந்திக்க உள்ள நிலையில், கோபி கட்சி அலுவலகம் முன்பு திரண்ட தொண்டர்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 



  • Sep 05, 2025 09:58 IST

    கட்சி அலுவலகம் புறப்பட்ட செங்கோட்டையன்

    இல்லத்தில் இருந்து கட்சி அலுவலகம் நோக்கி செங்கோட்டையன் புறப்பட்டார்.  அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், மனம் திறந்து பேசவுள்ள நிலையில் கோபி அதிமுக அலுவலகத்திற்கு தொண்டர்கள் படையெடுத்தனர். 



  • Sep 05, 2025 09:51 IST

    லாரிகளில் வந்து இறங்கிய பெண்கள் - செங்கோட்டையன் ஆதரவாளர்கள்!

    அதிமுக கட்சி அலுவலகத்தில் குவிந்த செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மற்றும் பெண்கள் லாரிகளில் வந்து இறங்கினர்.  அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்னும் சற்று நேரத்தில் செய்தியாளர்களை சந்திக்க உள்ள நிலையில், கோபி கட்சி அலுவலகம் முன்பு திரண்ட தொண்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



  • Sep 05, 2025 09:50 IST

    தொண்டர்கள் படைசூழ செங்கோட்டையன்

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அ.தி.மு.க அலுவலகத்துக்கு தொண்டர்கள் படைசூழ பரப்புரை வாகனத்தில் செங்கோட்டையன் சென்று கொண்டிருக்கிறார். இன்னும் சற்றும் நேரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேச உள்ளார்.



  • Sep 05, 2025 09:36 IST

    செங்கோட்டையன் கருத்தை அறிந்தபின்... - ஓ பன்னீர்செல்வம்

    கழகத்தின் மூத்த முன்னோடி செங்கோட்டையன்; அதிமுகவை தோற்றுவித்த எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே மாவட்ட செயலாளர் உட்பட பல்வேறு பதவிகளில் இருந்துள்ளார். அவரது செய்தியாளர் சந்திப்பிற்கு பிறகு, அவரின் கருத்துக்களை அறிந்து பத்திரிக்கையாளரை சந்திக்கிறேன் என ஓ.பி.எஸ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.



  • Sep 05, 2025 09:20 IST

    மனம் திறக்கும் செங்கோட்டையன்

    கோபியில் இன்னும் சில நிமிடங்களில் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்திக்க உள்ள நிலையில் அதிமுக அலுவலகத்தை நோக்கி தொண்டர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் பாதுகாப்பு கருதி அதிமுக அலுவலகத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



  • Sep 05, 2025 09:09 IST

    இன்னும் சற்று நேரத்தில் கோபியில் செய்தியாளர் சந்திப்பு

    கோபிசெட்டிபாளையம் அதிமுக அலுவலகத்தில் இன்னும் சற்று நேரத்தில் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். இந்நிலையில் செங்கோட்டையனின் அலுவலகம், வீடுகளில்  தொண்டர்கள் குவிந்துள்ளனர். அதிமுக தொண்டர்கள் பலரும் செங்கோட்டையனை காண குவிந்து வருகின்றனர்.



  • Sep 05, 2025 08:53 IST

    இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார் செங்கோட்டையன்

    ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் காலை 9 மணி அளவில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற உள்ளது. இதில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மனம் திறந்து பேச உள்ளதாக கூறியுள்ளார். இன்னும் சற்று நேரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேச உள்ளார்.



  • Sep 05, 2025 08:21 IST

    இன்றைக்கு என்ன பேசுவார் செங்கோட்டையன் - அரசியல் விமர்சகர்கள் யூகம்

    முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கட்சி தலைமையான எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தியை கொட்டி தீர்க்க போகிறாரா? கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைப்பது குறித்து மனம் திறந்து பேச போகிறாரா? பா.ஜ.க- வை அ.தி.மு.க. கூட்டணியில் சேர்த்தது குறித்து எதிர்ப்பு தெரிவித்து பேச போகிறாரா? அல்லது அ.தி.மு.க.வில் இருந்து விலக போகிறாரா? என்ற பல்வேறு கேள்விகளுக்கு இன்று பதில் கிடைத்துவிடும் என அரசியல் விமர்சகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 



  • Sep 05, 2025 08:17 IST

    நேற்று செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன்

    கோபி அருகே திருமண மண்டப திறப்பு விழாவில் செங்கோட்டையன் நேற்று பங்கேற்றார். தே.ஜ., கூட்டணியில் இருந்து விலகியதாக அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிவித்தது குறித்து நிருபர்கள் கேட்டனர். ''அவரது மனதில் என்ன எண்ணம் உள்ளது என்பதை, அவரிடம் தான் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அவருக்கு சரி என பட்டதை அவர் செய்திருப்பார். அது குறித்து நான் எதுவும் சொல்வது பொருத்தமாக இருக்காது,'' என்றார். மேலும் ''அ.தி.மு.க., தலைமையிடம் முரண்பட்டு நிற்கும் உங்களை, பா.ஜ., தலைமை சமாதானப்படுத்த முயன்றதா அல்லது பழனிசாமி தரப்பினர் உங்களிடம் பேசினரா,'' என கேட்டனர். ''செப்., 5ல், இவை எல்லாவற்றுக்கும் பதில் சொல்வேன் என ஏற்கனவே சொல்லி விட்டேன். அதன் அடிப்படையில், நாளை (இன்று) விபரமாக பேசுவேன்,'' என கூறி கைகூப்பி கும்பிட்டு சென்றார்.



  • Sep 05, 2025 08:15 IST

    கோபியில் மனம் திறந்து பேச உள்ள செங்கோட்டையன்

    அ.தி.மு.க., பொதுச்செயலர் மீதான அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாவட்டம் கோபி எம்.எல்.ஏ.,வுமான செங்கோட்டையன், கோபியில் இன்று மனம் திறந்து பேசவுள்ளதாக அறிவித்துள்ளார்.



  • Sep 05, 2025 07:45 IST

    சமீபகாலமாக கருத்து வேறுபாட்டில் இ.பி.எஸ் - செங்கோட்டையன்

    அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த தலைவருமான கே.ஏ.செங்கோட்டையன் சமீப காலமாக கருத்து வேறுபாட்டில் இருந்து வருகிறார். எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் தொடர்ந்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார். இதனால், கட்சியில் செங்கோட்டையனுக்கு அளித்து வந்த முக்கியத்துவத்தை எடப்பாடி படிப்படியாக குறைத்து, முற்றிலும் ஓரங்கட்டத் தொடங்கினார்.



  • Sep 05, 2025 07:43 IST

    செங்கோட்டையனின் அரசியல் வாழ்க்கை

    செங்கோட்டையன் 1977-ம் ஆண்டு முதல் 2021 வரை ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1991-ல் ஜெயலலிதா முதல்வரானபோது, போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். 2011-ல் வேளாண்மைத்துறை அமைச்சராகவும், பின்னர் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகவும், அதையடுத்து வருவாய்த் துறை அமைச்சராகவும் பணியாற்றினார். 2017-ல், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைந்த அமைச்சரவையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.  ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, சசிகலா தலைமையிலான அணியில் இருந்தார்.  



  • Sep 05, 2025 07:42 IST

    யார் இந்த செங்கோட்டையன்

    கே.ஏ. செங்கோட்டையன், தமிழகத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி. அவர் ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியிலிருந்து தமிழக சட்டமன்றத்திற்கு 8 முறை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 



  • Sep 05, 2025 07:41 IST

    அதிமுகவில் பிளவை ஏற்படுத்துமா இந்த செய்தியாளர் சந்திப்பு?

    அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் உள்ள ஒற்றைத் தலைமைக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் ஏற்கெனவே தனி அணி அமைத்து செயல்பட்டு வரும் நிலையில், செங்கோட்டையனின் இந்த நடவடிக்கை கட்சியில் மேலும் ஒரு பிளவை உருவாக்கக்கூடும். செங்கோட்டையன் தனது அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? அவர் தனிக் கட்சி தொடங்குவாரா அல்லது வேறு ஏதேனும் முக்கிய அறிவிப்பை வெளியிடுவாரா என்பது இன்று காலை 9 மணிக்கு தெரியவரும்.  



  • Sep 05, 2025 07:40 IST

    அதிமுகவின் மீது அதிருப்தி - செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு

    கடந்த சில மாதங்களாகவே, அதிமுகவில் செங்கோட்டையன் புறக்கணிக்கப்படுவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. கட்சியின் முக்கிய முடிவுகளில் அவருக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி அவரை படிப்படியாக ஓரங்கட்டுவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த சூழலில், தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக, செங்கோட்டையன் இன்று (செப்டம்பர் 5) காலை 9 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் செங்கோட்டையன் "மனம் திறந்து பேச உள்ளேன்" என்று முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து இருந்தார். 



news updates Ka Sengottaiyan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: