‘வாடா தமிழா சண்டை செய்வோம்’ – வைரலாகும் ‘காலா’ அறிவின் ராப் பாடல்
ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா படத்தின் பாடலாசிரியர் அறிவு என்கிற அறிவரசு. அரக்கோணத்தைச் சேர்ந்த இவர் இன்ஜினியரிங், எம்.பி.ஏ முடித்திருக்கிறார். ரஞ்சித்தின் அறிமுகம் கிடைக்க, காலா படத்தின் ‘உரிமையை மீட்போம்’ பாடலை எழுதி பிரபலமானார். இந்நிலையில், மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்ததிற்கு எதிராக…
‘வாடா தமிழா சண்டை செய்வோம்’ – வைரலாகும் ‘காலா’ அறிவின் ராப் பாடல்
ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா படத்தின் பாடலாசிரியர் அறிவு என்கிற அறிவரசு. அரக்கோணத்தைச் சேர்ந்த இவர் இன்ஜினியரிங், எம்.பி.ஏ முடித்திருக்கிறார். ரஞ்சித்தின் அறிமுகம் கிடைக்க, காலா படத்தின் ‘உரிமையை மீட்போம்’ பாடலை எழுதி பிரபலமானார்.
இந்நிலையில், மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்ததிற்கு எதிராக அறிவு எழுதி பாடியுள்ள ராப் பாடல் தற்போது வைரலாகி வருகிறது.
வரிகள் எளிதில் புரியும் படியும், அதேசமயம் ரசிக்கும் படியும் அமைந்துள்ளது இந்த ராப் பாடல். வாடா தமிழா என்று துவங்கும் இந்த பாடலில் தனி மனித தாக்குதல் ஏதுமில்லை என்பது சிறப்பம்சம்.
அதேபோன்று, மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு பாடல்கள் எழுதும் போது தனிமனித தாக்குதல் இல்லாமல் எழுத வேண்டும் என்ற கோரிக்கையையும் விடுத்துள்ளார்.