கார்த்திகை தீபத்திருநாள் : திருவண்ணாமலையில் மகா தீபம், பக்தர்கள் குவிந்தனர்

கார்த்திகை தீபத்திருநாள் 2018 : இன்று அதிகாலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

Kaarthigai theepam 2018: கார்த்திகை தீபத் திருநாளையொட்டி திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதையொட்டி மாநிலம் முழுவதும் இருந்து பக்தர்கள் குவிந்தனர். சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

திருவண்ணாமலை மகா தீபம் 2018 : ஒவ்வொரு வருடமும் திருவண்ணாமலையில் நடக்கும் ஜோதி மற்றும் தீப ஆராதனையை பார்ப்பதற்கு லட்சக் கணக்கில் பக்தர்கள் குவிவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழா கார்த்திகை மாதத்தில் வரும் பௌணர்மி நாள் தொடங்கி அடுத்த மூன்று நாட்களுக்கு கொண்டாடுவது வழக்கம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பௌர்ணமி அன்று திருவண்ணாமலை ஜோதி நிகழ்ச்சி மிகவும் சிறப்பாகவும் விசேசமாகவும் கொண்டாடப்பட்டு வரும்.

கார்த்திகை தீபம் கொண்டாடக் காரணம்

கிருதாயுகத்தில் முக்கண்ணனின் திரிபுரதகனத்தைக் கண்ட ஈசன் எழுப்பிய சிரிப்பொலியின் ஜோதியே உலகெங்கும் பரவி பிரகாசமான சூழல் உருவாகியது. அதனையே நாம் கார்த்திகை தீபமாக கொண்டாடுகிறோம்.

சிவனே மலையாகி நிற்கும் திருவண்ணாமலையில் இருக்கும் அண்ணாமலையார் திருக்கோவிலில் இன்று ஏற்றப்படும் விளக்கின் ஜோதியில் மூன்று தேவிகள் மற்றும் தேவர்களின் அனுக்கிரகம் தெரிவதாக நினைத்து வழிபடுவது ஐதீகம்.

லட்சுமி தேவியின் வடிவத்தை சுடரிலும், சரஸ்வதி தேவியின் வடிவத்தை ஒளியிலும், பார்வதி தேவியின் சக்தியை வெப்பமாகவும் காணும் அனைவரும் நற்கதி அடைவார்கள் என்று பெரியவர்கள் கூறுவது வழக்கமாகும்.

அதே போல் தீபத்தின் அடிப்பாகத்தில் பிரம்மனும், தண்டு பாகத்தில் மகாவிஷ்ணுவும், நெய் மற்றும் எண்ணெய் நிறையுமிடத்தில் சிவ பெருமானும் இருப்பதாய் கூறுவதும் ஐதீகம். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது.

திருவண்ணாமலை மகா தீபம் 2018

திருவண்ணாமலையில் இருக்கும் அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருநாள் அன்று அண்ணாமலையார் தீபம், மலையின் உச்சியில் ஏற்றப்படும். கடந்த 14ம் தேதி அருணாச்சலேஸ்வர் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது கார்த்திகை தீபம். இன்றூ மாலை மலையில் ஏற்றப்பட்ட தீபம் மிகவும் பிரசத்தி பெற்றது.  மிகப் பெரிய கொப்பரை ஒன்றில் 24 முழம் நீளம் கொண்ட துணியை கற்பூரத் தூள் கொண்டு திரியாக சுற்றி அந்த கொப்பரையில் வைக்கப்பட்டது. நெய் ஊற்றி ஏற்றப்படும் இந்த மகா ஜோதி 60 கி.மீ தூரம் வரை தெரியும்.

மேலும் படிக்க : கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துகள்

20 வளைய இரும்பு ராடுகள் கூடிய செப்புத் தகட்டில் செய்யப்பட்ட பாதுகாப்பு வளையத்தில் தான் இந்த கொப்பரை வைக்கப்பட்டு தீபம் ஏற்றப்படும். கொப்பரையின் மேல் மற்றும் கீழ் பாகங்களில் வளையங்கள் பொருத்தப்பட்டிருப்பதால், மலையின் உச்சிக்கு எடுத்துச் செல்வதில் பெரிய சிரமங்கள் ஏதும் ஏற்படுவதில்லை. இன்று அதிகாலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதையொட்டி திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்தனர். சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

கார்த்திகை தீபத்திருநாள் வழிபடும் முறை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு விதமாக கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. ஒரு சில இடங்களில் 7 நாட்கள் வழிபாடுகள் நடைபெறும். ஒரு சில இடங்களில் மூன்று நாட்கள் வழிபாடுகள் நடைபெறும். சில இடங்களில் உண்ணாவிரதம் மேற்கொண்டு இரவில் விளக்கேற்றி பூஜை செய்வார்கள்.

மேலும் படிக்க : களைக்கட்டும் திருவண்ணாமலை மாவட்டம்

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close