கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி : கிடுகிடுவென உயரும் கருங்கோழி இறைச்சி விலை!

கோழிக்கு மட்டும் இல்லங்க கோழி முட்டைக்கும் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஒரு முட்டை மட்டும் ரூ. 25க்கு விற்பனையாகிறது.

By: Updated: July 13, 2020, 05:02:39 PM

Kadaknath Karunkozhi chicken price soars high : கொரோனா நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி மட்டுமே நம்மை காக்கும் கருவியாக உள்ளது. பலரும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ள ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் கருங்கோழி இறைச்சிக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த கோழியின் இறைச்சியை உண்டால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்று பலரும் கருதி வருவதால் நாளுக்கு நாள் இந்த இறைச்சிக்கான தேவை அதிகரித்து வருகிறது.

ஜனவரி மாதம் ரூ. 450க்கு ஒரு கிலோ கருங்கோழி கறி விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அதிகரித்திருக்கும் தேவை காரணமாக ரூ. 1000க்கு ஒரு கிலோ கறி விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று இந்த கோழி முட்டைகளின் விலையும் உயர்ந்துள்ளது. ரூ. 15க்கு விற்கப்பட்ட ஒரு முட்டையின் விலை ரூ. 25 ஆக தற்போது உயர்ந்துள்ளது.

மேலும் படிக்க : கொரோனாவால் வருமானத்தை இழக்கும் திருப்பதி; 4 மாதத்தில் இவ்வளவு இழப்பா?

இயற்கை உணவுகள் மற்றும் தானியங்கள் மட்டுமே இதற்கு கொடுக்கப்பட்டு வளர்க்கப்படுவதால் கருங்கோழி உட்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று கோழி வளர்ப்பவர்கள் கூறுகின்றனர். ஆனால் மக்களே கருங்கோழி சாப்பிடுவது மட்டும் முக்கியமல்ல, வீட்டை விட்டு வெளியே செல்லும் போது முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளி பின்பற்றுவதும் முக்கியம் தான்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Kadaknath karunzozhi chicken price soars high in tamil nadu

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X