By: WebDesk
Updated: September 18, 2018, 10:08:47 AM
கடம்பூர் ராஜூ
அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பொது நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களை நடத்தி வருகிறது அதிமுக. நேற்று அவ்வாறாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்து கொண்டார் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ.
கருணாநிதியின் சமாதி குறித்து கடம்பூர் ராஜூ
அப்போது பேசிய அமைச்சர், கருணாநிதியின் சமாதிக்கு மெரினா கடற்கரையில் இடம் கொடுத்தது அதிமுக அளித்த பிச்சை என்றும், அதிமுகவினர் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டதால் தான் மெரினாவில் அவரின் சமாதிக்கு இடம் தரப்பட்டது என்றும் பேசியிருக்கிறார்.
மேலும் நீட் தேர்வு, மின்சார உற்பத்தி, ஜி.எஸ்.டி மற்றும் பெட்ரோல் டீசல் விலை குறித்தும் பேசினார் அமைச்சர். மேலும் சுகாதரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எந்த முறைக்கேடுகளிலும் ஈடுபடவில்லை என்று அவருக்கு ஆதரவாக பேசினார்.
டிடிவி தினகரன் ஆர்.கே. நகர் தொகுதியில் வெற்றி பெற்றதைப் போல் கோவில்பட்டி தொகுதியில் நின்று வெற்றி பெற்றுவிட இயலாது என்றும் அக்கூட்டத்தில் அமைச்சர் பேசியுள்ளார்.