கடம்பூர் ராஜு சர்ச்சை பேச்சு: அ.தி.மு.க-வில் சலசலப்பு

முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் கடம்பூர் ராஜு, ஜெயலலிதாவின் 1998-ல் பாஜக ஆட்சியைக் கவிழ்க்க எடுத்த முடிவு “வரலாற்றுப் பிழை” என்று விமர்சித்துள்ளது தற்போது பேசும் பொருளாக அமைந்துள்ளது.

முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் கடம்பூர் ராஜு, ஜெயலலிதாவின் 1998-ல் பாஜக ஆட்சியைக் கவிழ்க்க எடுத்த முடிவு “வரலாற்றுப் பிழை” என்று விமர்சித்துள்ளது தற்போது பேசும் பொருளாக அமைந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Kadambur Raju Speech Jayalalitha AIADMK BJP  Tamil News

பா.ஜ.க-வை புகழ்வதாக நினைத்து ஜெயலலிதாவின் முடிவை விமர்சித்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதால் அ.தி.மு.க-வில் திடீர் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

விருதுநகரில் நடைபெற்ற அ.தி.மு.க நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கடம்பூர் ராஜு, ”1998-ல் மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியை ஜெயலலிதா கவிழ்த்தது வரலாற்று பிழை. சுப்பிரமணிய சுவாமியின் தவறான வழிகாட்டுதலால் ஜெயலலிதா வரலாற்றுப் பிழை செய்துவிட்டார். பா.ஜ.க ஆட்சியை கொண்டு வந்ததும், அ.தி.மு.க-தான் கவிழ்த்ததும் அ.தி.மு.கதான். வரலாற்றுப் பிழையை செய்துவிட்டோம். ஜெயலலிதா செய்த இந்த பிழையால் மத்தியில் காங்கிரஸ் தி.மு.க. கூட்டணி 15 ஆண்டுகள் ஆட்சி செய்தது" என்று அவர் கூறியிருந்தார். 

Advertisment

பா.ஜ.க-வை புகழ்வதாக நினைத்து ஜெயலலிதாவின் முடிவை விமர்சித்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதால் அ.தி.மு.க-வில் திடீர் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சிலர் இதை அ.தி.மு.க-வின் தற்போதைய அரசியல் நிலைப்பாட்டுடன் தொடர்புபடுத்தி, கடம்பூர் ராஜு பா.ஜ.க-வுக்கு ஆதரவாக பேசுவதாக விமர்சித்துள்ளனர்.

அந்த வகையில், கடம்பூர் ராஜூவை அ.தி.மு.க-வில் இருந்து நீக்க வேண்டும் என்று அ.தி.மு.க முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், ”பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்து செய்த தவறுக்கு பரிகாரமாகவே ஆட்சியை கவிழ்த்தேன் என பேசியவர் ஜெயலலிதா. தங்களை வழக்குகளில் இருந்து காத்து கொள்வதற்காகவே முன்னாள் அமைச்சர்கள் இப்படி பேசுகின்றனர்” என்றார்.

செய்தி: க.சண்முகவடிவேல்.

Aiadmk Jayalalitha Kadambur Raju

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: