காடுவெட்டி குரு உடல் அடக்கம்: திரளான தொண்டர்கள் அஞ்சலி

காடுவெட்டி குரு உடல் அடக்கம் இன்று நடந்தது. பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.

காடுவெட்டி குரு உடல் அடக்கம் இன்று நடந்தது. பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.

காடுவெட்டி குரு, வன்னியர் சங்கத் தலைவராகவும் பாமக முக்கிய தளகர்த்தராகவும் திகழ்ந்தார். உடல்நலப் பாதிப்பு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று (மே 26) இறந்தார்.

காடுவெட்டி குரு உடல் இன்று (மே 27) காலை அவரது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர். இதையொட்டி அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட ஜெயங்கொண்டம், மீன் சுருட்டி, தா.பழுர், ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று 2-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டன.

ஜெயங்கொண்டம் பகுதியில் முற்றிலும் பஸ்கள் இயக்கப்படவில்லை. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

×Close
×Close