Advertisment

காடுவெட்டி குரு மகன், மருமகனுக்கு அரிவாள் வெட்டு; மருத்துவமனையில் அனுமதி

மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் மகன், மருமகன் இருவரும் ஒரு தகராறில் அரிவாளால் வெட்டப்பட்டு காயமடைந்ததால், அவர்கள் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், காடுவெட்டியில் பாதுகாப்புக்காக போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kaduvetti Guru son attacks, Kaduvetti Guru son in law attack, காடுவெட்டி குரு, குரு மகன் மருகனுக்கு அரிவாள் வெட்டு, வன்னியர் சங்கம், பாமக, vanniyar sangam leader j guru, PMK cadre attacks on J Guru son, ariyalur, kaduvetti guru, PMK

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகேயுள்ள காடுவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் மறைந்த வன்னியர் சங்க தலைவர் ஜெ.குருவின் மகன் கனலரசன்(24). இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த பாமக பிரமுகரான சின்னப்பிள்ளை என்பவரின் குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், நேற்று இரவு இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில், குருவின் மகன் கனலரசன், குருவின் மருமகன் மனோஜ், அவரது சகோதரர் மதன் ஆகியோரை, சின்னப்பிள்ளை, அவரது மகன் அய்யப்பன், சின்னப்பிள்ளை தம்பி காமராஜ், அவரது மகன் சதீஷ், ஆகியோர் தாக்கியதுடன், அரிவாளால் வெட்டியுள்ளனர்.

அரிவால் வெட்டில், குரு மகன் கனலரசன், மருமகன் மனோஜ், அவரது அண்ணன் மதன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அதே போல, கனலரசன் தரப்பு வெட்டியதில், சின்னப்பிள்ளை தரப்பை சேர்ந்த காமராஜ் மகன் சதிஷுக்கு காயம் ஏற்பட்டது.

இந்த அரிவாள் வெட்டு சண்டையில் காயமடைந்த அனைவரும் ஜெயங்கொண்ட அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கே அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், அவர்கள் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

காடுவெட்டி குருவின் மகன் கனலரசன், குருவின் மருமகன் மனோஜ் குமார், அவரது சகோதரர் மதன் ஆகியோர் அரிவாளால் வெட்டப்பட்ட செய்தி பரவியதைத் தொடர்ந்து, காடுவெட்டி கிராமத்தில் பதற்றம் நிலவுவதால், பாதுகாப்புகாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil
Pmk Kaduvetti Guru
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment