காடுவெட்டி குரு மகன் கனலரசன் கைது; திருச்சி மத்திய சிறையில் அடைப்பு; என்ன நடந்தது?

மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ-வும் வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் கொடியேற்ற சென்றபோது போலீசார் அவரைக் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

kaduvetti guru son kanalarasan arrested, maaveeran manjal padai, pmk, காடுவெட்டி குரு மகன் கனலரசன் கைது, காடுவெட்டி குரு, கனலரசன், மாவீரன் மஞ்சள் படை, பாமக, வன்னியர் சங்கம், kanalarasan, kaduvetti guru, vanniyar sangam

மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ-வும் வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் கொடியேற்ற சென்றபோது போலீசார் அவரைக் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்த நடவடிக்கைக்கு காரணம் பாமக நிறுவனர் ராமதாஸ் கொடுக்கும் அழுத்தமும் அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு துணைபோவதும் காரணம் என்று கனலரசனின் அத்தையும் குருவின் சகோதரியுமான மீனாட்சி குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மறைந்த முன்னால் எல்.எல்.ஏ-வும், வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குருவின் மகன் கனலரசன். குருவின் மறைவுக்குப் பிறகு, கனலரசன் வன்னியர் சங்க அமைப்பை சேர்ந்த குருவின் ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து மாவீரன் மஞ்சள் படை என்ற அமைப்பை தலைவராக இருந்து நடத்தி வருகிறார்.

கனலரசன் மாவீன் மஞ்சள் படை அமைப்பின் சார்பில், அண்மையில் ஜெயங்கொண்டத்தில் கொடிக்கம்பம் அமைத்து தங்கள் அமைப்பின் கொடியை ஏற்றினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ம.க-வைச் சேர்ந்த சிலர் கொடிக்கம்பத்தைச் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, நேற்று (பிப்ரவரி 14) ஜெயங்கொண்டத்தில் மீண்டும் அதே இடத்தில் கொடியேற்ற வந்த கனலரசனை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

கனலரசன் கைது குறித்து, காடுவெட்டி குருவின் தங்கையும் கனலரசனின் அத்தையுமான மீனாட்சி, “காடுவெட்டி குரு மறைவிற்கு பிறகு ராமதாஸ் எங்க குடும்பத்துக்கு பல்வேறு சித்ரவதைகளைச் செய்து வருகிறார். அதற்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணைபோகிறார்’ என குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இது குறித்து மீனாட்சி ஊடகங்களிடம் கூறுகையில், “சில நாட்களுக்கு முன் கனலரசன் மஞ்சள் படை அமைப்பின் சார்பில் கொடி ஏற்றினார். அதனை பா.ம.க நிர்வாகி ஒருவர் சேதப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து, நேற்று மீன்சுருட்டி காவல் நிலைய எஸ்.ஐ மலைச்சாமி வீட்டுக்கு வந்து கனலரசனிடம், `நாங்க பாதுகாப்பு தருகிறோம். நீங்க வந்து கொடி ஏற்றுங்கள் என அழைத்துச் சென்றார். இதையடுத்து கொடியேற்ற சென்ற கனலரசனையும் அவரது ஆதரவாளர்களையும் கொடி ஏற்றவிடாமல் தடுத்ததோடு கனலரசனை கைது செய்து ஜெயங்கொண்டத்தில் ஒரு மண்டபம் தங்க வைத்தனர்.

ஆனால், போலீசார் மாலை 6 மணிக்கு கனலரசனை கடந்த ஆண்டு நடைபெற்ற மோதல் வழக்கு ஒன்றில் கைது செய்வதாகக் கூறி அழைத்து சென்று மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி அரியலூர் சிறைக்கு அழைத்துச் சென்று பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின் இன்று `உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சிக்காக அரியலூர் வந்தார். அவரை கனலரசன் சந்திக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால், ஸ்டாலினை கனலரசன் சந்தித்து விடக்கூடாது என்பதற்காக நேற்றே கனலரசனை கைது செய்து இருக்கிறார்கள்.” என்று மீனாட்சி பல பரபரப்பு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Kaduvetti guru son kanalarasan arrested and jailed tiruchi central jail

Next Story
தேர்தலில் போட்டியிட விருப்பமனு; அதிமுக வெளியிட்ட முக்கிய அறிவிப்புadmk announced, admk calling for candidate application form, tamil nadu assembly elections 2021, assembly elections, அதிமுக, விருப்பமனு தாக்கல் செய்ய அறிவிப்பு, தமிழ்நாடு, சட்டமன்றத் தேர்தல் 2021, சட்டப்பேரவை தேர்தல், கேரளா, புதுச்சேரி, அஇஅதிமுக, tn assembly election, aiadmk, ops, eps, tamil nadu, puduchery, kerala, assembly elections, admk cadidate application form, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express