கொரோனா நோயாளிகளுக்கு இலவச புத்தகங்கள் வழங்கிய காலச்சுவடு…

இன்று நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அமைந்திருக்கும் கொரோனா வார்டுகளில் உள்ள நோயாளிகளுக்கு புத்தகம் தரும் முயற்சியில் இறங்கியுள்ளது

By: April 18, 2020, 5:21:59 PM

Kalachuvadu publicataions donate free books to kumari Covid19 patients : கன்னியாகுமரி மாவட்டதில் அமைந்துள்ளது ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை. அம்மாவட்டத்தில் கொரொனா வைரசால் பாதிக்கபட்டுள்ள 16 நபர்கள் அந்த அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்று வருகின்றனர்.வெளி ஆட்கள் அனுமதி முழுமையாக மறுக்கப்படிருக்கும் இந்நேரத்தில் நோயாளிகள் மிகவும் தனிமையில் இருக்கின்றனர்.

அவர்கள்  இந்த காலத்தை உபயோகமாக செலவழிக்க வேண்டி காலசுவடு பதிப்பகம் அந்த 16 நோயாளிகளிடம் தொடர்பு கொண்டு புத்தகங்கள் வேண்டுமா என கேட்டு உள்ளனர். அதில் புத்தகம் வேண்டும் என கேட்டுகொண்ட 6 நோயாளிகளுக்கு தலா 2 புத்தகங்கள் வீதம் 12 புத்தகங்களையும் அவர்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு ஐந்தைந்து புத்தகங்களையும் அனுப்பி உள்ளது காலசுவடு பதிப்பகம். 6 பேர் தங்களுக்கு புத்தகங்கள் வேண்டாம் என்று கூறிவிட்டனர். மூவர் எங்களிடம் மத நூட்கள் உள்ளது என்று மறுத்துவிட்டனர். ஒருவர் போனே எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :  இந்தியாவின் உதவி மகத்தானது : தலை வணங்குகிறோம் – ஐ.நா!

தனிமையால் வாடும் நோயாளிகளுக்கு புத்தகங்களை இலவசமாக வழங்கிய காலச்சுவடு பதிப்பகத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர் பலரும்.  இன்று நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அமைந்திருக்கும் கொரோனா வார்டுகளில் உள்ள நோயாளிகளுக்கு புத்தகம் தரும் முயற்சியில் இறங்கியுள்ளது காலச்சுவடு பதிப்பகம்.  குமரி மாவட்டத்தில் வெள்ளாடிச்சிவிளை, தேங்காய்பட்டிணம், மணிக்கட்டிப் பொட்டல் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகள் முழுமையாக சீல் வைக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Kalachuvadu publicataions donate free books to kumari covid19 patients

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X