சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நவம்பர் 22&23 ஆம் தேதி கலைஞர் 100 வினாடி வினா போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.
திமுக மகளிர் அணி மற்றும் கலைஞர் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில், திராவிட இயக்க வரலாற்றையும் கொள்கைகளையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் வகையில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி முன்னெடுப்பில் நடைபெற உள்ளது.
வினாடி வினா’ இறுதிப் போட்டியில், சிறப்பு விருந்தினராக திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளார்.
இரு பிரிவுகளிலும் இறுதிச் சுற்றில் வெற்றிபெறும் அணிகளுக்கு தலா ரூ.10 லட்சமும், 2ஆம் இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.6 லட்சமும், 3ஆம் இடத்தைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.3 லட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கி கௌரவிக்கவுள்ளார்.
கலைஞர் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதியின் புது முயற்சியாக கலைஞர் 100 வினாடி-வினா போட்டி தொடங்கப்பட்டது.
இதில் தமிழ் மொழி வளர்ச்சி, இலக்கியம், திராவிட வரலாறு, தமிழ்நாட்டின் வரலாறு, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் ஆற்றிய பணிகள் உள்ளிட்டவை குறித்து பல கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது.
மகலைஞர் 100 வினாடி-வினா போட்டியில் 18 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 18 வயதிற்கு மேலானவர்களுக்கு என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு போட்டி நடைபெறுகிறது.
இதன் மூலம் அனைத்து வயது தரப்பினரும் இதில் பங்கேற்க வகைசெய்தது. மேலும், மண்டல அளவில் போட்டிகள் 12 மாவட்டத்தில் நடைபெற்றது.
இந்த இடங்கள் அனைத்திற்கும் கனிமொழி கருணாநிதி நேரடியாகச் சென்று போட்டியைப் பார்வையிட்டு வெற்றியாளர்களை வாழ்த்தி பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார்.
இந்தப் போட்டியில் பங்கேற்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களைக் கனிமொழி எம்.பி பாராட்டி வாழ்த்தினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“