எம்.ஜி.ஆர் நினைவு நாளில் திரையுலகினர், கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஆடிப்பாடி கொண்டாட உள்ளனர் என்று அதிமுக விமர்சித்துள்ளது.
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் திமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ‘கலைஞர் நூற்றாண்டு விழா’ டிசம்பர் 24 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. தொழிலாளா்கள் சங்கம் (பெப்சி) முதல் நடிகா்கள் சங்கம் வரை சினிமாவின் அத்தனை சங்கங்களும் இணைந்து இந்த விழாவை நடத்துகின்றன.
தற்போது இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் தொடங்கி நடந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திரையுலகினருக்கு அழைப்பு விடுக்கும் பணி நடக்கிறது. நடிகர்கள் ரஜினி, கமல் இருவருக்கும் சமீபத்தில் நேரில் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவிற்காக டிசம்பர் 23, 24 ஆகிய தேதிகளில் தமிழ் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ’டிச.24 எம்ஜிஆர் நினைவு நாளில் திரையுலகினர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஆடிப்பாடி கொண்டாட உள்ளனர் என்று, முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ-வும், அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளருமான இன்பதுரை விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்வீட்டரில் வெளியிட்ட பதிவு
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“