முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4-ம் அண்டு நினைவு நாளை யொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப்பேரணி தொடங்கியது.
அண்ணாசாலை முதல் கருணாநிதி நினைவிடம் வரை அமைதிப்பேரணி நடைபெறுகிறது. இதற்காக, அண்ணா சாலை, வாலாஜா சாலை வழித்தடங்களில் பேக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கலைஞரின் நினைவு நிகழ்வுகள் நடைபெறவில்லை. இதனையொட்டி இந்த ஆண்டு நினைவு நிகழ்வுகள் தொடங்கி உள்ளது. இதன் முதல்கட்டமாக அண்ணா சாலையில் உள்ள கருணாநிதி சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை அண்ணா சாலையிலிருந்து மெரினாவில் உள்ள கலைஞரின் நினைவிடம் வரை அமைதிப்பேரணி நடைபெறுகிறது. இந்த பேரணையில் கனிமொழி, டி.ஆர் பாலு, கே.என் நேரு என்று பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில் ஓமந்தூரார் வளாகத்தில் இருந்து புறப்பட்ட திமுகவின் அமைதிப் பேரணி மெரினா வந்தடைந்தது. மெரினாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். அதனைத் தொடர்ந்து கருணாநிதி இல்லமான கோபாலபுரத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்லவுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil