அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில், திருச்சி மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைரவிழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி நிகழ்வின் துணைத் தலைவராக அமைச்சர் கே.என்.நேரு இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
/indian-express-tamil/media/media_files/2024/11/11/H2NMOJimpCOq0m4SxC7g.jpg)
தமிழ்நாடு பாரத சாரணியர் இயக்கத்தின் தலைவரும், அமைச்சருமான அமைச்சர் அன்பில் மகேஸ், துணைத்தலைவருக்கான Scarf-வினை கே.என். நேருக்கு அணிவித்தார்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் பெருந்திரளணி தொடர்பான முதல் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
/indian-express-tamil/media/media_files/2024/11/11/5HD0NQEJQA3bRXjLY8sJ.jpg)
இந்நிகழ்வில் பெருந்திரளனி பொறுப்பாளர் அறிவொளி, தொடக்க கல்வி இயக்குனர் நரேஷ், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“