Advertisment

கருணாநிதி அருகில் அமர்ந்து பேசிய ஸ்டாலின்: நூலக திறப்பு விழாவில் நெகிழ்ச்சி தருணம்

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நவீன தொழில்நுட்பம் மூலம், கருணாநிதி அருகில் அமர்ந்து பேசுவது போல திரை வடிவமைக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kalaignar centenary

kalaignar centenary library opening ceremony

மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மதுரை புது நத்தம் சாலையில் ரூ.206 கோடி மதிப்பில் 7 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று (ஜூலை 15) திறந்து வைத்தார். கல்விக் கண் திறந்த காமராஜர் பிறந்த நாளில் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. நூலகத்தின் முன்பாக நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Advertisment

மிகவும் பிரம்மாண்டமாக நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள நூலகத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. குழந்தைகளுக்கான தனிப்பிரிவு, போட்டித்தேர்வர்களுக்கு பிரத்யேக பிரிவு, பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு ஒலி வடிவிலான ஸ்டுடியோ, சிறார்களுக்கான சிறிய தியேட்டர் என ஒவ்வொருன்றும் பிரம்மிப்பூட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. சிறுவர்களை கவரும் வகையில் அவர்களுக்கான முதல் தளத்தில் தமிழ் எழுத்துக்கள் வடிவில் இருக்கைகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நவீன தொழில்நுட்பம் மூலம், கருணாநிதி அருகில் அமர்ந்து பேசுவது போல திரை வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்தத் திரை அருகே முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் துரைமுருகன் இருவரும் அமர்ந்து உற்சாகம் ததும்ப பேசி நெகிழ்ந்தனர். தொழில்நுட்பம் மூலம் அமைக்கப்பட்டுள்ள இந்த திரை பார்வையார்களிடையே மிகுந்த வரவேற்பை பெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Karunanithi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment