/tamil-ie/media/media_files/uploads/2021/07/ma-subramanian.jpg)
Health Minister Ma. Subramanian
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில், கருணாநிதியின் நினைவாக ஆய்வுக்கென தனி மையம் அமைக்கப்படும். இதற்காக அரசு ரு.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
பொதுப்பணித்துறை (PWD) அதிகாரிகள் பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு இடத்தைக் கண்டறிந்து, கட்டமைப்பை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
1966 மற்றும் 1971-ம் ஆண்டு சைதாப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருணாநிதிக்கு, கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மையம் மரியாதை செலுத்தும் வகையில் அமையும்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் (CMCHIS) கீழ் பயனாளிகளுக்கான சிறப்புப் பதிவு முகாமின் போது சுப்பிரமணியன் இதனை அறிவித்தார். 168, 169, 171, 172 ஆகிய வார்டுகள் உட்பட நான்கு இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டன.
முந்தைய அரசு ஒரு பயனாளிக்கு ரூ.699 பிரீமியம் செலுத்திய நிலையில், தற்போதைய அரசு ரூ.849 ஆக உயர்த்தியுள்ளது, மேலும் காப்பீட்டு வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர சிகிச்சைச் செலவை அரசே ஏற்கும் இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ், இதுவரை 1,81,860 பேர் பயனடைந்துள்ளனர், சிகிச்சைக்காக₹159.48 கோடி செலவானது.
237 அரசு மற்றும் 455 தனியார் நிறுவனங்கள் உட்பட 692 மருத்துவமனைகள் இந்த திட்டத்தை வழங்குகின்றன என்று அமைச்சர் சுப்ரமணியன் மேலும் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.