தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, 100 ரூபாய் நினைவு நாணயம் இன்று (ஆக.18) வெளியிடப்படுகிறது. சென்னை கலைவாணர் அரங்கதத்தில் இன்று மாலை 6.50 மணிக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 100 ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார். இதற்காக அவர் இன்று சென்னை வருகிறார். தொடர்ந்து, கடலோர காவல்படையின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் புதிய கட்டடத்தையும் அவர் திறந்து வைக்கிறார்.
கருணாநிதி நினைவு நாணயம் வெளியீட்டு விழாவையொட்டி சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
1. அனைத்து விஐபி மற்றும் விவிஐபி வாகனங்களும் காமராஜர் சாலை, நேப்பியர் பாலம், வாலாஜா சாலை, அண்ணா சாலை மற்றும் காலைவாணர் அங்கம் விழா நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்கப்படும்.இதனால் பொதுமக்கள் தங்கள் செல்லும் இடத்திற்கு ஏற்றவாறு பயணத்தினை திட்டமிட்டு செல்லுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
2. மற்ற மூத்த கலைஞர்கள் கதீட்ரல் சாலை, ஆர்கே சாலை, காமராஜ் சாலை, அண்ணா சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக கலைவாணர் அரங்கம் விழா நடைபெறும் இடத்தை அடையலாம்.
3. கலைவாணர் அஙர்கம், கலைஞர் நினைவிடம், வாலாஜா சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். எனவே வாகன ஓட்டிகள் மாற்று வழியை தேர்வு செய்து செல்லுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
4. பல்வேறு மாவட்ட கனரக வாகனங்களில் இருந்து (பேருந்துகள் மற்றும் மாக்சிகேப்) பிற கட்சி வாகனங்கள் அண்ணா சிலை வழியாக பெரியார் சிலை, தீவுத்திடல் மைதானம், பிடபிள்யூடி மைதானம் வழியாக சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தை நோக்கி செல்லுமாறு அனுமதிக்கப்படுவார்கள்.
5. பெரியார் சிலை, சுவாமி சிவானந்தா சாலை, எம்எல்ஏ விடுதி சாலை, ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மைதானம் ஆகிய இடங்களில் அனைத்து இலகுர வாகனம் மற்றும் தன்னார்வலர்களின் மோட்டார் வாகனங்களும் அனுமதிக்கப்படும்.
6. வாலாஜா சாலை, காமராஜர் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, போர் நினைவு சின்னம், கொடிப்பணியாளர் சாலை மற்றும் அதை சுற்றியுள்ள முக்கியமான பகுதிகளில் வணிக வாகனங்கள் 10 மணி முதல் மாலை 4 மணி வரை கண்டிப்பாக அனுமதிக்கப்படாது.
7. வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தை இடையூறாகவும் மற்றும் விவிஐபி-கள் வரும் வழித்தடத்திலும் வாகனங்களை நிறுத்தக்கூடாது.
8. தொண்டர்கள் மற்றும் கட்சியினர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்துமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
9. சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் காமராஜர் சாலை மற்றும் வாலாஜா சாலை முழுவதும் தற்காலிகமாக வாகனங்களை நிறுத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது'' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advisory Note of GCTP on the Eve of “Muthamizh Arignar Kalaignar Centenary Commemorative Coin Release Ceremony on 18.08.2024”
— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic) August 17, 2024
🚥#chennai #traffic pic.twitter.com/WXaKKpR4EC
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.