Advertisment

ஆளவந்தார் நிலத்தில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

முட்டுக்காடு கிராமத்தில் இறைப் பணிக்காக ஒதுக்கப்பட்ட ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தில் கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்னாட்டு அரங்கம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

author-image
WebDesk
New Update
ராமதாஸ் கோரிக்கை

முட்டுக்காடு கிராமத்தில் இறைப் பணிக்காக ஒதுக்கப்பட்ட ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தில் கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்னாட்டு  அரங்கம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

Advertisment

சென்னையில் பிரம்மாண்டமான சர்வதேச பன்னாட்டு  அரங்கம் மைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.  இதற்கான இடம்  தேர்வு செய்யும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ்  வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்னாட்டு  அரங்கம் கிழக்கு  கடற்கரை சாலையில் முட்டுக்காடு கிராமத்தில் கட்டப்பட இருப்பதாகவும் கலைஞர் பன்னாட்டு  அரங்கம் கட்டப்படவுள்ள 60 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் பெரும்பகுதி ஆயிரம் காணி ஆளவந்தார் அறக்கட்டளைக்கு  சொந்தமான நிலம் என்றும் ஊடங்களில் வெளியாகி உள்ள செய்திகள்  அதிர்ச்சி அளிக்கின்றன. இந்த செய்திகளின் உண்மைத்தன்மை குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும். இந்த செய்தி உண்மையாக இருந்தால் கடுமையாக கண்டிக்கதக்கது.

சென்னையை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்ற கண்காட்சி அரங்கம். ஊடக அரங்கங்கள், நட்சத்திர விடுதிகள், ஊர்தி நிறுத்தங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் பன்னாட்டு அரங்கம் கட்டப்பட வேண்டியது கட்டாயத் தேவைதான். ஆனால் அதற்காக கையகப்படுத்தப்படும் நிலம் இன்னொரு உன்னத நோக்கத்தை சீர்குலைப்பதாக இருக்கக் கூடாது. கலைஞர் நுற்றாண்டு நினைவு பன்னாட்டு அரங்கம் அமைக்க சென்னையிலும், சென்னைக்கு வெளியிலும் அரசுக்கு சொந்தமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன. அவற்றில் பன்னாட்டு அரங்கத்தை கட்டுவதை விடுத்து ஆயிரம்காணி ஆளந்தார் அறக்கட்டளை நிலத்தில் கட்டக்கூடாது.

செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் வன்னிய குலத்தில் பிறந்த ஆளவந்தார் நாயகர், அவரது கடுமையான உழைப்பால் சேர்த்த 1550 ஏக்கர் நிலங்களை  இறைப்பணிக்காக வழங்கினார். அவரது பெயரில் செயல்பட்டு வரும் அருள்மிகு ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமாக இப்போது 1054 ஏக்கர் நிலம் உள்ளது. ஆளவந்தார் எழுதி வைத்த நிலங்கள், அவரால் குறிப்பிடப்பட்ட இறைப் பணிக்கான தேவையை விட பல மடங்கு அதிகம் என்பதால், அவற்றை வேறு பணிகளுக்காக பயன்படுத்தலாமா? என கேள்வி எழுந்துள்ளது.

எனவே முட்டுக்காடு கிராமத்தில் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தில் கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்னாட்டு அரங்கம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். சூரிய ஒளி மின்திட்டங்களை செயல்படுத்தல், வீடுகளைக் கட்டுதல் போன்ற பணிகளுக்காகவும் ஆளவந்தார் நிலங்களை பயன்படுத்தக்கூடாது. எந்த காலத்திலும், எதற்காகவும் ஆளவந்தாரின் நிலங்கள், அவரது விருப்பத்தை நிறைவேற்றுவதை தவிர்த்து வேறு எந்தப் பணிகளுக்கும் வழங்கப்படாது என்பதை அரசு அறிவிப்பாக வெளியிட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.   

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment