முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக அரசு சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவும் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் உதயநிதி, பொன்முடி, ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், கேஎன்.நேரு போன்றோரும், கனிமொழி, ஆ.ராசா, தயாநிதி மாறன் போன்ற திமுக எம்பிக்களும் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
பிறந்தார் - நிறைந்தார் என்ற வாழ்வின் இரு புள்ளிகளுக்கிடையில்,
— M.K.Stalin (@mkstalin) June 3, 2024
தொட்ட துறைகளில் எல்லாம் உச்சம் தொட்டார்!
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வாழ்ந்தார்!
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டார்!
தமிழினத்தின் எழுச்சிக்காக உழைத்தார்!
வரலாற்றைத் தன்னைச் சுற்றிச் சுழலவிட்டார்!
முத்தமிழறிஞர்… pic.twitter.com/hUGYqPdmOe
தொடர்ந்து சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் ‘தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு மலர் - 2024’ என்ற புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இந்த புத்தகத்தை அவரின் அண்ணனும் கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க.முத்து பெற்றுக்கொண்டார்.
கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு மு.க.ஸ்டாலின், தனது X பக்கத்தில் பதிவிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:
தலைவரே! பாதை அமைத்தீர்கள்; பயணத்தைத் தொடர்கிறோம்!#கலைஞர்100 pic.twitter.com/7EnwdrOj7c
— M.K.Stalin (@mkstalin) June 3, 2024
”2024-ஆம் ஆண்டு என்பது இந்த நூற்றாண்டின் தலைவரான கருணாநிதிக்கு நூற்றாண்டு. ஐம்பது ஆண்டுகாலம் திமுகவின் தலைவா், ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல்வா், சட்டப் பேரவை, சட்ட மேலவை உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார்.
திரையுலகத்திலும், நாடக மேடையிலும் முத்திரை பதித்துள்ளார். பத்திரிகையை நடத்தியதுடன், பத்திரிகை ஆசிரியராகவும் இருந்தார். அவா் தான் இன்று நாம் காணும் நவீன தமிழ்நாட்டை உருவாக்கினார்.
இன்று நாம் பார்க்கும் எத்தனையோ திட்டங்கள் அவரால் உருவாக்கப்பட்டவை. ஒருதுளி மையில் இந்த மாநிலத்தை வளர்த்தார். அதனால்தான் நிறை வாழ்க்கைக்குப் பிறகும் நினைவு கூரப்படுகிறார்.
அவருக்கு நமது நன்றியின் அடையாளமாக, மதுரையில் நூலகம், சென்னையில் பல்நோக்கு மருத்துவமனை, திருவாரூரில் கோட்டம், அலங்காநல்லூரில் ஏறுதழுவுதல் அரங்கம், சென்னையின் நுழைவாயிலில் பேருந்து முனையம் கட்டினோம். வங்கக்கடலோரம், நினைவகம் நிலைநாட்டினோம்
நீங்கள் இருந்து செய்ய வேண்டியதை, உங்கள் மகனாக நான் செய்து வருகிறேன். எதிர்கொண்ட எல்லா தேர்தல்களிலும் நாங்களும் வென்று காட்டி இருக்கிறோம். நீங்கள் உருவாக்கிய நவீன தமிழகத்தை உன்னத தமிழகமாக உயர்த்தி காட்டி வருகிறோம்.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் திரும்பிப் பார்க்கும் திராவிட மாடல் ஆட்சியை நடத்திவருகிறோம். உலக நாடுகளோடு போட்டி போடும் அளவுக்கு தொழில் வளர்ச்சியைக் கண்டு வருகிறோம்.
கம்பீர தமிழகத்தை நாங்கள் உருவாக்கிக் காட்டி வருகிறோம். நீங்கள் பாதை அமைத்தீர்கள், நாங்கள் பயணத்தைத் தொடர்கிறோம்” இவ்வாறு மு.க.ஸ்டாலின் அந்த வீடியோவில் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.