கருணாநிதி மறைந்து 16 ஆம் நாள்... மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட கோபாலபுர இல்லம்!

கருணாநிதியின் குடும்பத்தார் அனைவரும் கோபாலபுரம் வந்துள்ளனர்

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி மறைந்து  இன்றுடன் (23.8.18) 16 ஆம் நாள் நிறைவடைகிறது. இதையொட்டி கோபாலபுரத்தில் வைக்கப்பட்டிருக்கும் அவரது திருவுருவப்படம் மாலைகள்  அலங்கரிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி மறைவு:

திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானர். காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி வயதிகம் காரணமாக மரணம் அடைந்தார்.

அவரின் இறப்பு திமுகவிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாக அமைந்துள்ளது.தமிழக அரசியலில் மூத்த தலைவரான கருணாநிதியின் மரணம் திமுக தொண்டர்களை இன்று வரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கருணாநிதியின் உடல் மெரினாவில் உள்ள அண்ணா சமாதிக்கு அருகில் வைக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி

மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதியின் திருவுருவப்படம்

பொதுமக்கள் பலரும், கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கருணாநிதியின் மறைவுக்கு பின்னர், திமுகவை வழிநடத்தும் மொத்த பொறுப்பையும் ஸ்டாலின் ஏற்றுள்ளார்.

கருணாநிதி

கோபாலபுரம் இல்லம்

இந்நிலையில், கருணாநிதி மறைந்து 16 ஆம் நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கருணாநிதியின் இல்லமான கோபாலபுரத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருப்படம் மாலைகளால அலங்கரிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதியின் குடும்பத்தார் அனைவரும் கோபாலபுரம் வந்துள்ளனர்

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close