மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் மு. கருணாநிதி தனது முதல் குழந்தை என்று கூறிய முரசொலி நாளிதழுக்கு இன்று 80 வயதாகிறது. மு. கருணாநிதி தொடங்கிய முரசொலி நாளிதழ் 80வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
மு.கருணாநிதி தனது 18 வயதில் 1942 ஆம் ஆண்டு ‘முரசொலி’ துண்டுப் பிரசுரமாகத் தொடங்கப்பட்டது. 1960-களில் நாளிதழாக மாற்றப்பட்டது. தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக உள்ள திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக வெளிவரும் முரசொலி-க்கு புதன்கிழமை (ஆகஸ்ட் 10) 80 வயதாகிறது. திமுக தொண்டர்களின் மனதிலும் இதயத்திலும் தனி இடம் பிடித்த முரசொலி நாளிதழ், கருணாநிதி மறைவுக்கு பிறகு, இப்போது மு.க. ஸ்டாலின் மகனும் திமுகவின் இளைஞரணி செயலாளருமான உதயநிதியால் நடத்தப்படுகிறது.

கருணாநிதி முரசொலியில் திமுக தொண்டர்களுக்கு உடன்பிறப்பே என்று எழுதிய கட்டுரைகள், கவிதைகள், கடிதங்கள் மூலம் தினமும் ஆயிரக் கணக்கான திமுக தொண்டர்களைச் சென்றடைந்தார்.
கருணாநிதி முதுமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு கோபாலபுரம் இல்லத்திலேயே ஓவ்வெடுக்கத் தொடங்குவதற்கு முன் 2016 ஆம் ஆண்டு இறுதி வரை, கருணாநிதி தினமும் முரசொலி அலுவலகத்திற்குச் சென்று திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதம் முரசொலியின் அனைத்துப் பதிப்புகளிலும் வெளிவந்தது. கருணாநிதி தான் பெற்ற முதல் குழந்தை முரசொலி என்று கூறியுள்ளார்.
1942 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் போது கருணாநிதியால், அவரது சொந்த ஊரான திருவாரூரில் தொடங்கப்பட்டது. கருணாநிதி ‘சேரன்’ என்ற புனைப்பெயரில் அவர் எழுதிய கட்டுரைகளுடன் துண்டுப்பிரசுரமாக வெளியானது. பின்னர், வார இதழாக மாறியது. 1960 ஆம் ஆண்டு முரசொலி நாளிதழாக மாற்றப்பட்டு, கருணாநிதி தனது திரைப்படம் மற்றும் அரசியல் ஈடுபாடு காரணமாக தலைநகர் சென்னைக்கு மாறிய பிறகு, முரசொலியை சென்னையில் இருந்து வெளியிடத் தொடங்கினார்.
முரசொலி புதன்கிழமை (ஆகஸ்ட் 10) 80 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் சிறப்பு பதிப்போடு வெளிவந்தது. அதில், முதல்வர் மு.க. ஸ்டாலின், என். ராம் போன்ற மூத்த பத்திரிகையாளர்கள் தமிழகத்தில் முரசொலி ஆற்றிய முக்கியமான பங்கையும் திமுகவின் எழுச்சியில் முரசொலியின் பங்கையும் விவரிக்கும் கட்டுரைகளை எழுதியுள்ளனர்.
தமிழக மக்களாள் கலைஞர் என்று என்புடன் அழைக்கப்பட்ட கருணாநிதி தான் பெற்ற முதல் குழந்தை முரசொலி என்று பெருமிதத்துடன் கூறினார்.
முரசொலி குறித்து கருணாநிதி, “தவழ்ந்தாடும் – தத்தி நடக்கும் – தணலை மிதிக்கும் – விழும்! எழும்! ஆனாலும் எந்த நிலையிலும் கொண்ட கொள்கையை மண்டியிட வைத்ததில்லை முன்வைத்த காலைப் பின் வைக்க நினைத்ததுமில்லை! முரசொலி நான் பெற்ற முதல் குழந்தை! ஆம் அந்த முதற் பிள்ளைதான் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனைப்போல கிண்கிணி அணிந்த கால்களுடன் பகைவர்கள் பலரைக் களத்தில் சந்திக்க சென்று வா மகனே! செருமுனை நோக்கி! என அனுப்பி வைக்கப்பட்ட அன்புப் பிள்ளை!” என்று குறிப்பிட்டுள்ளார்.
கருணாநிதியின் முதல் குழந்தை முரசொலி என்பதை அந்தக் கால திமுக தொண்டர்கல் பலரும் க்கள் நினைவு கூர்ந்தனர். “தலைவர் சென்னையில் இருந்தால், ஒரு நாளைக்கு இரண்டு முறை முரசொலி அலுவலகத்திற்கு வருவார். அவர் நோய்வாய்ப்பட்டபோது அது முடிவுக்கு வந்தது. ஆனால் அவர் ஒருபோதும் அலுவலகத்திற்குச் செல்வதைத் தவிர்க்கவில்லை. அவர் காகிதத்தை அச்சிடுவதற்கு முன் அதைச் சரிபார்த்து, மறுநாள் காலையில் செய்தித்தாள் வெளியிடப்படும்போது அதை மீண்டும் ஒருமுறை படிப்பார்” என்று திமுகவினர் கூறுகிறார்கள்.
மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.பகவான் சிங் கூறுகையில், கருணாநிதி தன்னை முதலில் பத்திரிகையாளர் என்று அழைத்துக் கொள்வதில் பெருமிதம் கொண்டிருந்தார் என்றும் 1975-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் அறிவிக்கப்பட்ட எமர்ஜென்சியின் போது முரசொலி பேச்சுரிமைக்கு ஆற்றிய பங்களிப்பை நினைவு கூர்ந்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”