Advertisment

கொள்கையால் வாழும் கொற்றவர் கலைஞர்: 97வது பிறந்தநாளுக்கு பிரபலங்கள் புகழஞ்சலி

பிரபலங்களும்,அரசியல் தலைவர்களும் மறைந்த தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் பெருமைகளை நினைவு கூர்ந்து வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கொள்கையால் வாழும் கொற்றவர் கலைஞர்: 97வது பிறந்தநாளுக்கு பிரபலங்கள் புகழஞ்சலி

மறைந்த கலைஞர் கருணாநிதி அவர்களின் 97 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக மக்களும், கழக தொண்டர்களும் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்கின்றனர்.

Advertisment

முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, திமுக தலைமை அலுவலகம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.

கலைஞர் என்பது பன்முகம் கொண்ட ஒரு தத்துவத்தின் பெயர் - ஸ்டாலின் 

கருணாநிதி நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கொரோனா பெருந்தொற்று தமிழக மக்களை துயர் அடைய வைத்துள்ளதால், ஆடம்பர நிகழ்வுகளை முற்றிலும் தவிர்க்குமாறு ஸ்டாலின் கட்சித் தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.

கலைஞர் என்பது ஒரு தனி மனிதரின் பெயரல்ல, பன்முகம் கொண்ட ஒரு தத்துவத்தின் பெயர் என்று அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்தார்.

 

 

 

சாதி ஒழிப்பிற்கும், சம்த்துவத்திற்கும் கலைஞர் மேற்கொண்ட முயற்சிகள் எண்ணற்றவை. பிரபலங்களும்,அரசியல் தலைவர்களும் மறைந்த தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் பெருமைகளை நினைவு கூர்ந்து வருகின்றனர்.

 

உங்களைப்போல் ஒரு தலைவனைத் தந்தையாகவும் பெற்றது மறுபிறவியற்ற இந்த வாழ்க்கையின் பெரும் பேறு- கனிமொழி 

 

பக்குவம்தான்உனது படைக்கலன்! சமத்துவம்தான்உனது அடைக்கலம் - தொல். திருமாவளவன் 

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  

 

தமிழ் மொழியின் புகழுக்காக அயராது பாடுபட்டவர்- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி 

 

கி. வீரமணி:

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் உடலால் மறைந்தார் எனினும், உணர்வால், சாதனைகளால் நம் நெஞ்சங்களில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார். கொள்கையால் வாழும் கொற்றவர் அவர்! என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தெரிவித்தார்.

கலைஞர் கருணாநிதியை நினைவுக் கூர்ந்த பொன்னம்பல அடிகளார்:

கலைஞரின் அழியாத விழுமி அவரின் போர்க்குணம்  : வைரமுத்து  

முத்தமிழறிஞர் கலைஞரின் 97ஆம் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது  நினைவிடத்திலும் , கோபாலபுரத்திலும்,

சி.ஐ.டி காலனியிலும் வைரமுத்து புகழ் வணக்கம் செலுத்தினார்.

 

 

 

 

 

M Karunanidhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment