Kalaignar M Karunanidhi Statue Opening: கலைஞர் மு.கருணாநிதி சிலை திறப்பு மற்றும் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நிகழ்வில் கலந்துகொண்டு, சிலையை திறந்து வைத்தார். பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மம்தா, மு.க.ஸ்டாலின், கி.வீரமணி, புதுவை முதல்வர் நாராயணசாமி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் உரையாற்றினார்கள்.
கலைஞர் கருணாநிதி மரணம் அடைந்து, ஓராண்டு ஆகிறது. அவரது முதலாவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கருணாநிதி மிகவும் விரும்பி உலவிய இடம், கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் முரசொலி அலுவலகம். அங்கு கருணாநிதிக்கு சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.
அன்புத் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலைத் திறப்பு பொதுக்கூட்டம்... https://t.co/b2pUkDejft
— M.K.Stalin (@mkstalin) August 7, 2019
முரசொலி வளாகத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழா, அவரது முதலாம் ஆண்டு நினைவு தினமான இன்று (ஆகஸ்ட் 7) நடைபெற்றது. மாலை 5 மணிக்கு இந்த சிலையை மம்தா பானர்ஜி திறந்து வைத்தார்.
சிலை திறப்பு விழா முடிந்ததும், சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் மாலை 5.30 மணிக்கு பொதுக்கூட்டம் தொடங்கியது. இதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். முரசொலி ஆசிரியர் செல்வம் வரவேற்று பேசினார். மம்தா பானர்ஜி, புதுவை முதல்வர் நாராயணசாமி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். மு.க.ஸ்டாலின் நன்றியுரையாற்றினர்.
Live Blog
Kalaignar M Karunanidhi Statue Opening: கலைஞர் கருணாநிதி முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, தமிழகம் முழுவதும் இருந்து திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் சென்னையில் குவிந்தனர்.
இறுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "இந்தியாவில் எந்த இயக்கத்திற்கும் கருணாநிதி போன்ற தலைவர் கிடையாது. அதனால் தான் அவருக்கு அண்ணா அறிவாலயத்தில் சிலை வைத்தோம். அவரது அண்ணன் ஊரான சேலத்தில் வைத்தோம். கலைஞர் தன இளமை வாழ்க்கையை அதிகம் கழித்த திருச்சியில் சிலை வைத்தோம்.. இன்னும் பல இடங்களில் வைப்போம். இப்போது அவரது மூத்த பிள்ளையான முரசொலியில் வைத்திருக்கிறோம். எல்லா இடங்களில் கலைஞர் நின்று கொண்டு கம்பீரமாக காட்சி அளிப்பார். ஆனால், முரசொலியில் அவர் உட்கார்ந்த நிலையில், கையில் அட்டையும், பேனாவும் கொண்டு எழுதுவது போல வடிவமைத்துள்ளோம். ஏனென்றால், இப்படி எழுதுவது தான் கலைஞருக்கு பிடிக்கும். 1000 வருடங்களில் அடைய வேண்டிய பெருமையை, கலைஞர் 100 வருடங்களில் அடைந்து விட்டார். முன்பை விட இப்போது தான் கலைஞர் அதிகம் தேவைப்படுகிறார்" என்றார்.
மேற்குவந்த முதல்வர் மமதா பானர்ஜி பேசுகையில், 'ஸ்டாலின் என மிகச் சரியாகத் தான் கருணாநிதி பெயர் வைத்திருக்கிறார். ஸ்டாலின் போரில் தீர்க்கமாக போராடக் கூடியவர். கருணாநிதி மறைந்துவிட்டாலும், அவர் நம் இதயத்தில் வாழ்கிறார். சர்வாதிகாரத்திற்கு எதிராக நாம் போராட வேண்டும். தமிழுக்கும், வங்கத்துக்கும் பெரிய தொலைவில்லை. சுபாஷ் சந்திர போஸ் நடந்தே தென்னகம் வந்திருக்கிறார். நீங்கள் உங்கள் மாநிலத்திற்கு என்ன தேவை என்பதில் தெளிவாக உள்ளீர்கள். அதற்காகவே நான் தமிழ் மக்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன்.
ஜெய் ஹிந்த்... ஜெய் பங்களா... என எப்போதும் சொல்வேன்.. இனி ஜெய் தமிழ் நாடு என்றும் சொல்வேன்
கி.வீரமணி பேசுகையில், "மிகவும் உணர்வுப்பூர்வமான நிகழ்ச்சி இது. கலைஞர் விட்ட பணிகளை மட்டுமில்லாது, சொல்லாத பணிகளையும் செய்யும் வெற்றி வீரராக ஸ்டாலின் திகழ்கிறார். கலைஞர் எப்படி எதிர் நீச்சல் போட்டாரோ, அது போல அவரது சிலையை திறக்க வைக்க மேற்குவங்கத்தில் இருந்து ஒரு எதிர்நீச்சல் வீராங்கனை மமதா பானர்ஜி வந்திருக்கிறார்" என்றார்.
"ராஜாஜி தொடங்கி எடப்பாடி வரை அரசியல் செய்தவர் கலைஞர் கருணாநிதி. கருணாநிதி அமேசான் நதி போல.. தமிழ்நாடும், தமிழும் தான் கருணாநிதியின் நினைவுச் சின்னம். ஆகஸ்ட் 15ம் தேதி அந்தந்த மாநிலங்களின் கோட்டைகளில் முதல்வர்கள் கொடி ஏற்ற அதிகாரம் பெற்றுக் கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி" என்று கவிஞர் வைரமுத்து பேசியுள்ளார்.
கருணாநிதி நினைவு தின பொதுக் கூட்டத்தில் தொடக்கவுரை ஆற்றிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, "கலைஞர் கருணாநிதியின் சாதனைகளை பற்றி பேசிக் கொண்டே இருக்கலாம். 2021ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என விரும்புகிறேன். அப்போது மு.க.ஸ்டாலினின் ஆட்சி அமைய வேண்டும்" என்றார்.
சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் கருணாநிதியின் ஓராண்டு நினைவு தின கூட்டம் நடைபெறுகிறது. திமுக நிர்வாகிகள், தோழமை கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். திமுக முன்னாள் எம்எல்ஏ உசேன் மறைவுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கலைஞர் கருணாநிதியின் திருவுருவச் சிலைத் திறப்பு பொதுக்கூட்டம் லைவ்...
அன்புத் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலைத் திறப்பு பொதுக்கூட்டம்... https://t.co/b2pUkDejft
— M.K.Stalin (@mkstalin) August 7, 2019
சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
முத்தமிழறிஞர் கலைஞர் துயிலும் நினைவகம் நோக்கி.. @isai_ #ThankYouகலைஞர் pic.twitter.com/KexpdvWamj
— Vinoth Varadharajan_😍Trichy😍 (@Vin88Vinoth) August 7, 2019
சென்னை முரசொலி அலுவலகத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவச் சிலைத் திறப்பு நிகழ்வை காண,
சென்னை முரசொலி அலுவலகத்தில், நம் உயிரோடு கலந்திருக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலைத் திறப்பு நிகழ்வு. https://t.co/gxuvhoeNhm
— M.K.Stalin (@mkstalin) August 7, 2019
முத்தமிழறிஞர் கலைஞரின் முதலாமாண்டு நினைவு நாளில் அவரது நினைவுகளைச் சுமந்து அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே தொடங்கி தலைவர் நினைவகம் வரை நடைபெறும் அமைதி பேரணி. https://t.co/NLEL0KiJJg
— M.K.Stalin (@mkstalin) August 7, 2019
கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின், கனிமொழி இணைந்து மரக்கன்று நட்டனர். நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் திரளாக கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights