Advertisment

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்: யாரும் OTP எண் கேட்டால் பகிர வேண்டாம்- விழுப்புரம் கலெக்டர்

அட்டைகள் அனைவரையும் சென்றடையும் முன், உடனடியாக பணம் எடுப்பதற்கு வசதியாக பயனாளிகளுக்கு ஏடிஎம் கார்டுகள் வழங்கப்பட உள்ளது.

author-image
WebDesk
New Update
மகளிர் உரிமை திட்டம்

Kalaignar Magalir Urimai Thogai

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் வரப்பெற்ற குறுஞ்செய்தியினைத் தொடர்ந்து, செல்போனில் OTP எண் கேட்டால் யாரும் பகிரவேண்டாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisment

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் இன்று (செப்.15) தொடங்கப்பட்ட நிலையில், பயனாளர்களின் வங்கிக் கணக்கில் ரூ.1000/ நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.

அட்டைகள் அனைவரையும் சென்றடையும் முன், உடனடியாக பணம் எடுப்பதற்கு வசதியாக பயனாளிகளுக்கு ஏடிஎம் கார்டுகள் வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில் ஒரு சில மகளிருக்கு வரப்பெற்ற குறுஞ்செய்தியினைத் தொடர்ந்து OTP எண் கேட்பதாக புகார்கள் வந்தது.

இத்திட்டத்தில் பயனடைவதற்கு OTP எண் ஏதும் நடைமுறையில் இல்லை.

இத்திட்டத்தின் கீழ் ஏடிஎம் கார்டு மூலமாகவோ அல்லது வங்கியில் நேரடியாக சென்று தொகையினை எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் OTP எண் பகிர எவரேனும் தொலைபேசியில் கேட்டால் அவரது கைபேசி எண்ணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04146-223265 மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 04146-222172 ஆகிய தொலைபேசி எண்களில் புகார் தெரிவிக்கலாம்.

புகார் தெரிவிக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து தொகை வரப்பெறாதவர்கள் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகம்/வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், சார் ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தினை அணுகி விவரத்தினை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் மகளிர் உரிமை திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க தவறியவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம். அவர்களின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.

செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Villupuram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment