கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் டோக்கன் வினியோகம் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது.
Advertisment
இதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் ரேஷன் கடை பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று, மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கான விண்ணப்பம் மற்றும் டோக்கன்களை விநியோகம் செய்தனர்.
இந்த திட்டத்துக்கான விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்ய தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்று முதல் விண்ணப்பங்களைப் பதிவேற்றும் பணி நடைபெறுகிறது.
இந்நிலையில் தருமபுரியில் தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாமில், மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்களை பதிவேற்றும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 24) தொடங்கி வைத்தார்.
Advertisment
Advertisements
அப்போது, அங்கு வந்த ஒரு பயனாளிக்கு, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பத்தை எப்படி பதிவு செய்வது எப்படி என்று ஸ்டாலின் செய்து காட்டினார்.
பிறகு அந்த பயனாளியிடம் உங்க விண்ணப்பம் பதிவாகிடுச்சு, உங்களோட விவரங்கள் எல்லாம் சரியா இருக்கா, உங்களுக்கு உரிமைத் தொகை கிடைக்குமாங்கிற தகவல்கள் எல்லாம் கொஞ்ச நாள்ல வரும். அப்புறம் உங்க வங்கி கணக்குல பணம் செலுத்தப்படும், என்று கூறினார்.
நடப்பு ஆண்டில் இந்த திட்டத்தை நிறைவேற்ற ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.